லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இது தொடர்பான அதிகார்வப்பூர்வ தகவல் அண்மையில் தான் தெரிய வந்தது. மேலும் இந்த காதல் ஜோடி விரைவில் கணவன், மனைவியாக பார்க்க ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரபல நடிகை நயன்தாரா (Nayanthara) மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவனுடன் (Vignesh Shivan) சுவாமி தரிசனம் செய்து கொண்டார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


ALSO READ | திருப்பதியில் ரஜினிகாந்த் மகள்கள்: வீடியோ வைரல்



 


இன்று காலை விஐபி தரிசனம் மூலமாக சுவாமி தரிசனத்துக்கு இவர்கள் இருவரும் சென்றனர். சுவாமி தரிசனத்திற்கு பின் கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கோவிலுக்கு வெளியே வந்த அவர்களுடன் ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.


இதற்கிடையில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தாவை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கியிருக்கிறார் விக்னேஷ் சிவன். படத்தின் ரிலீஸ் குறித்து அவர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் நயன்தாரா அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துவிட்டார். அந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாகிறது. அத்துடன் ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கி வரும் பாலிவுட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. புனேவில் நடந்த படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டார்.


மேலும் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கப் போகிறார் நயன்தாரா என்று தகவல் வெளியாகியிருக்கிறது. முன்னதாக அஸ்வின் இயக்கிய மாயா படத்தில் நடித்திருந்தார் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | அண்ணாத்த படத்தின் மாஸ் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!