திருப்பதியில் ரஜினிகாந்த் மகள்கள்: வீடியோ வைரல்

ரஜினிகாந்தின் மகள்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

Written by - ZEE Bureau | Last Updated : Sep 23, 2021, 03:33 PM IST
திருப்பதியில் ரஜினிகாந்த் மகள்கள்: வீடியோ வைரல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டு மகள்களான ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ஆகியோர் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இவர்களது வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) மற்றும் லதா தம்பதிக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் சௌந்தர்யா நடிகரும் தொழிலதிபருமான விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்டு உள்ளார். 

ALSO READ | முறுக்க, கொதிக்க, தெறிக்க வெளியானது அண்ணாத்த மோஷன் போஸ்டர்

சற்றுமுன் ஐஸ்வர்யா, சௌந்தர்யா, அவரது கணவர் விசாகன் மற்றும் மகன் வேத் ஆகியோர் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் திருப்பதி ஏழுமலையானை சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் அவர்களுக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

இந்த நிலையில் தரிசனம் முடிந்து திருப்பதி கோவிலில் இருந்து வெளியே வந்த ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகியோர்களின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

 

இதற்கிடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். மேலும் வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேசிங்கு பெரியசாமி இயக்கும் திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | அண்ணாத்த படத்தின் மாஸ் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

More Stories

Trending News