கோலி-அனுஷ்காவுக்கு டிசம்பரில் திருமணம்?
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதையடுத்து நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் இந்திய அணி விளையாடவுள்ளது.
அதன் படி இந்த தொடரில் அணியின் தலைவரான கோலி தனிப்பட்ட காரணமாக தனக்கு விடுப்பு வழங்கும்படி கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுள்ளார்.
இந்நிலையில் கோலி தன் காதலி அனுஷ்கா சர்மாவை வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்யவுள்ளதாகவும், அதன் காரணமாகவே கோலி விடுப்பு கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் தற்போது வரை இதுதொடர்பாக எவ்வித அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை ஆனால் விரைவில் அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.