சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் விருமன். கொம்பன் படத்தை இயக்கிய இயக்குநர் முத்தையா இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக, இயக்குநர் சங்கரின் மகள் நடிகை அதிதி ஷங்கர் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின் நடிகர் கார்த்தி கிராமத்து கதையம்சம் கொண்ட படத்தில் நடித்துள்ளதால், இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், விருமன் படம் இன்று உலகமெங்கும் ரிலீசாகி உள்ளது. தமிழகத்தில் மட்டும் இப்படம் 400-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீசாகி உள்ளது. விருமன் படம் இன்று வெளியானதால், அதிகாலையிலேயே தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும், மேல தாளங்கள் முழங்க இப்படத்திற்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


தற்போது இந்தப் படத்தின் டைட்டில் பிஜிஎம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. விருமன் படத்தில் இடம்பெறும் டைட்டில் கார்ட் பிஜிஎம், விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திற்காக அனிருத் போட்ட பிஜிஎம்-ஐ போல் உள்ளதாக விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மாஸ்டர் படத்தில் விஜய் அறிமுக காட்சியில் அனிரூத் சூப்பரான பிஜிஎம் ஒன்றை போட்டிருப்பார். அந்த பிஜிஎம்மின் வேகம் குறைத்து விருமன் படத்தின் டைட்டிலுக்கு யுவன் சங்கர் பிஜிஎம் போட்டியிருப்பதாக வீடியோவுடன் விஜய் ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.




ஆனால் இதனை நடிகர் கார்த்தி மற்றும் யுவன் சங்கர் ராஜா ரசிகர்கள் மறுத்துள்ளனர். மேலும், விஜய்யின் மாஸ்டர் படத்தின் அறிமுக காட்சிகளுக்கு போடப்பட்ட பிஜிஎம் சென்னை 28 படத்தில் போடப்பட்ட ஜல்ச பண்ணுங்கடா பிஜிஎம்மின் காபி என பதிலடி கொடுத்துள்ளனர்.



இரண்டு பேரின் ரசிகர்களும் மாறி மாறி வீடியோக்களை ரிலீஸ் செய்து பிஜிஎம் சர்ச்சைக்கு பிள்ளையார்சுழி போட்டிருப்பதால், சமூகவலைதளம் பையராக இருக்கிறது. கார்த்தி விஜய் ரசிகர்களாக தொடங்கிய மோதல், யுவன் - அனிரூத் ரசிகர்களின் மோதலாக மாறியிருக்கிறது. 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ