லத்தி படப்பிடிப்பில் விஷாலுக்கு எலும்பு முறிவு..! கேரளாவில் சிகிச்சை
ஹைதராபாத்தில் லத்தி சூட்டிங்கில் பங்கேற்றிருந்த விஷாலுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் சிகிச்சைக்காக அவர் கேரளா சென்றுள்ளார்.
வீரமே வாகை சூடும் படம் வெளியீட்டிற்குப் பிறகு நடிகர் விஷால் லத்தி படப்பிடிப்பில் பங்கேற்றார். ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த சூட்டிங்கில் கலந்து கொண்ட அவர், சண்டைக்காட்சிகளில் நடித்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாரதவிதமாக ஏற்பட்ட விபத்தில் விஷாலுக்கு ஹேர்லைன் பிராக்சர் எனப்படும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ரஜினி-விஜய்-எஸ்.கேவை ஒரே மேடையில் ஏற்றிய நெல்சன்..!
இதனால், உடனடியாக படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய அவர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு எலும்புகளில் விரிசல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மேல்சிகிச்சைக்காக கேரள சென்றுள்ளார். 3 வாரம் அங்கு தங்கியிருக்கும் விஷால், கால் எலும்பு முறிவுக்கான சிகிச்சையை தொடர உள்ளார்.
எலும்பு முறிவு சரியான பிறகு மீண்டும் லத்தி படப்பிடிப்பில் பங்கேற்கிறார். அநேகமாக மார்ச் முதல் வாரத்தில் லத்தி இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஹேர்லைன் பிராக்சர் என்பது அழுத்ததின் காரணமாக தோல் கிழியாமல் எலும்புகளில் ஏற்படும் விரிசலாகும். அறுவை சிகிச்சை இல்லாமல் மாவுக்கட்டு மூலம் இதனை குணப்படுத்த முடியும்.
லத்தி படத்தை அறிமுக இயக்குநர் ஏ.வினோத்குமார் இயக்குகிறார். விஷாலின் 32வது படமான இதில் சுனைனான ஹீரோயினாக நடிக்கிறார். நந்தா மற்றும் ரமணா ஆகியோர் கூட்டாக தயாரிக்கின்றனர்
மேலும் படிக்க | வலிமை இயக்குநர் வினோத்துக்கு போனிக்கபூர் அனுப்பிய மெசேஜ்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR