வலிமை இயக்குநர் வினோத்துக்கு போனிக்கபூர் அனுப்பிய மெசேஜ்

வலிமை படத்தில் இருக்கும் சேஸிங் ஆக்ஷன் காட்சிகளை மாஸாக இயக்குநர் ஹெச்.வினோத் எடுத்திருப்பதாக தயாரிப்பாளர் போனிக்கபூர் பாராட்டியுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 11, 2022, 03:59 PM IST
  • வலிமை படம் பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீஸ்
  • ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது
  • இயக்குநர் வினோத்துக்கு போனிக்கபூர் பாராட்டு
வலிமை இயக்குநர் வினோத்துக்கு போனிக்கபூர் அனுப்பிய மெசேஜ் title=

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்திருக்கும் ’வலிமை’ திரைப்படம் இம்மாதம் 24 ஆம் தேதி ரிலீஸாகிறது. படத்தை தயாரித்துள்ள போனி கபூர் தனது மனைவி ஸ்ரீதேவி மறைந்த நாளில் இப்படத்தை ரிலீஸ் செய்கிறார். தமிழ்நாடு முழுவதும் இப்படத்துக்காக தியேட்டர்கள் புக் செய்யப்பட்டு, ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். முதல் நாள் முதல் ஷோவை பார்க்க வேண்டும் என ஆர்வத்துடன் இருக்கும் ரசிகர்கள், வலிமை நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என அடித்து சொல்லுகின்றனர்.

மேலும் படிக்க | ஹாலிவுட் படங்களுக்கு இணையானது வலிமை! போனி கபூரின் நண்பர் ரிவியூ!

தமிழில் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வலிமை ரிலீஸ் செய்யப்படுகிறது. போலீஸாக நடித்திருக்கும் அஜித், படத்தில் டூப் இல்லாமல் அவரே பைக் சேஸிங் சீன்களில் நடித்துள்ளார். டிரெய்லரிலும் ஆக்ஷன் காட்சிகள் புல்லரிக்க வைத்துள்ளது. இந்நிலையில், வலிமை குறித்து பேசிய தயாரிப்பாளர் போனிக் கபூர், வலிமை படம் தரமாக தயாராகி இருப்பதாகவும், ஆக்ஷனுக்கு குறைவிருக்காது என கூறியுள்ளார்.

இயக்குநர் ஹெச்.வினோத்தை பாராட்டியுள்ள அவர், சேஸிங் சீன்கள் மிகச்சிறப்பாக இருப்பதாகவும், படத்தின் ஸ்டார் போர்ஷனாக அந்தக் காட்சிகள் இருக்கும் என கூறியுள்ளார். போலீஸ் கெட்டப்பில் அஜித் மிரட்டியிருப்பதாகவும் கூறியிருக்கிறார் போனிகபூர். வலிமை வெளியாக 13 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் ரசிகர்கள் இப்போதே படத்துக்கான கவுண்டவுனை ஸ்டார்ட் செய்துள்ளனர். மதுரையில் பெரும்பாலான தியேட்டர்களில் வலிமை படத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால், வசூலிலும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | Master vs valimai: இரண்டு படத்திற்கும் உள்ள ஒற்றுமைகள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News