காதலியுடன் டூர் சென்றுள்ள நடிகர் விஷால்? வைரலாகும் வீடியோ!
Vishal: நடிகர் விஷால், ஒரு பெண்ணின் தோள் மேல் கைப்போட்டுக்கொண்டு செல்லும் வீடிேயோ வைரலாகி வருகிறது.
கோலிவுட் திரையுலகில் பிரபல கதாநாயகர்களுள் ஒருவராக வலம் வருபவர், விஷால். இவரது திருமணம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாவதுண்டு. அதே போல தற்போதும் ஒரு வைரலாகி வருகிறது.
நடிகர் விஷால்:
தெலுங்கு தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் மகன் விஷால், 2004ஆம் ஆண்டு வெளியான ‘செல்லமே’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நட்சத்திரமாக திகழும் இவர், பல ஆக்ஷன் படங்களில் நடித்துள்ளார். காதல் படமாக இருந்தாலும் அதில் வெட்டுக்குத்து-சண்டை காட்சிகளில் நடிப்பதுதான் இவருக்கு பிடித்த விஷயமாக இருக்கும். தமிழ் சினிமாவில் அதிகளவில் காவல் அதிகாரி வேடமிட்டு நடித்த ஹீரோக்களுள் இவரும் ஒருவர்.
தொடரும் காதல் சர்ச்சைகள்..
நடிகர் விஷாலுக்கு தற்போது 46 வயதாகிறது. தற்போது வரை சிங்கிளாக இருக்கும் இவரை சுற்றி எப்போதும் காதல் சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. இவர், லக்ஷ்மி மேனனுடன் பாண்டிய நாடு மற்றும் நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தார். லக்ஷ்மி மேனன், விஷாலை விட வயதில் மிகவும் இளையவர் என்றாலும், இவர்கள் ஒரு முத்தக்காட்சியில் நடித்தனர். இது, இவர்களின் காதல் சர்ச்சைகளுக்கு தீனியாய் அமைந்தது. இவர்கள் அதன் பிறகு பெரிதாக எந்த படத்திலும் சேர்ந்து நடிக்கவில்லை. இதையடுத்து அந்த சர்ச்சைகளுக்கு முழுக்கு போடப்பட்டது. நடிகர் விஷாலுக்கும் தெலுங்கு நடிகை அனிஷாவிற்கும் 2019ஆம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. ஆனால், சில பிரச்சனைகள் காரணமாக இந்த திருமணம் தடைப்பட்டு போனது. இதற்கான காரணம் குறித்து வெளியில் பேசப்படவில்லை.
மேலும் படிக்க | பிக்பாஸ் பூர்ணிமா நடித்துள்ள முதல் படம்! ரிலீஸ் எப்போது தெரியுமா?
காதலியுடன் விஷால்..
நடிகர் விஷால் குறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு பெண்ணின் தோள் மீது கைப்போட்டுக்கொண்டு நியூயார்க் சாலையில் நடந்து கொண்டிருக்கிறார். கேமராவை பார்த்தவுடன் துணியை பாேட்டு மறைத்துக்கொண்டு அந்த பெண்ணை இழுத்துக்கொண்டு ஓடுகிறார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், “இது அவரது புது காதலியாக இருக்குமோ?” என்று கேள்வியெழுப்பி வருகின்றனர்.
தனக்கான ப்ரமோஷனா? படத்திற்கான ப்ரமோஷனா?
நடிகர்-நடிகைகள் திடீரென்று ட்ரெண்டாவதற்கு ஏதாவது செய்வதுண்டு. அவர்களே தங்களது பி.ஆர்களை வைத்து காதல் சர்ச்சைகளை பரப்புவதுண்டு. அப்படி, விஷாலும் இது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டு வைரலாவதற்காக இப்படி செய்கிறாரோ என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உலவி வருகிறது.
விஷாலின் அடுத்தடுத்த படங்கள்..
நடிகர் விஷால், கடைசியாக ‘மார்க் ஆண்டனி’ படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இது, அவருக்கு பல ஆண்டுகள் கழித்து அமைந்த ஹிட் படமாக இருந்தது. இதையடுத்து, அவர் இயக்குநர் ஹரியுடன் 9 ஆண்டுகள் கழித்து கைக்கோர்த்துள்ளார். இந்த படத்திற்கு ‘ரத்னம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
மேலும் படிக்க | கோலிவுட் நாயகிகளின் வீட்டில் களைக்கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ