கோலிவுட் நாயகிகளின் வீட்டில் களைக்கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

Chrirstmas 2023 Kollywood Actress Celebration: கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைக்கட்டியதை தொடர்ந்து தமிழ் பட நடிகைகள் பலர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். 

1 /8

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் உலகம் முழுவதும் களைக்கட்டியது. இதை தொடர்ந்து சில தமிழ் கதாநாயகிகள் தங்களது கிறிஸ்துமஸ் கொண்டாட்ட போட்டோக்களை வெளியிட்டுள்ளனர். 

2 /8

நடிகை நயன்தாரா தனது குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கணவர் விக்னேஷ் சிவன், இரு மகன்கள் உயிர் மற்றும் உலக் உடன் மகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்து கொண்ட நயன்தாரா. 

3 /8

நடிகை நிக்கி கல்ராணி, தனது கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர், நடிகர் ஆதியை கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் மரகத நாணயம் படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது காதலிக்க ஆரம்பித்தனர். 

4 /8

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு சென்ற நடிகை தர்ஷா குப்தா. இவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானார். வீக் எண்டில் எப்போதும் புகைப்படங்களை வெளியிடுவது இவரின் வழக்கம். அந்த வகையில், கிறிஸ்துமஸ் தினத்தன்றும் தனது போட்டோக்களை இவர் வெளியிட்டுள்ளார். 

5 /8

பிரேமம் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த அனுபமா ரவிச்சந்திரன் தமிழில் ‘கொடி’ படம் மூலம் அறிமுகமானார். இவர், இந்த கிறிஸ்துமஸ் தினத்தை தனது குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். 

6 /8

ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர், நிவேதா பெத்துராஜ். இவர், தனது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை போட்டோக்களாக வெளியிட்டு அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

7 /8

தமிழ் திரையுலகின் ’ஹாட்’ கதாநாயகிகளுள் ஒருவராக இருக்கிறார், மாளவிகா மோகனன். இவர் விக்ரமுடன் தங்கலான் படத்தில் நடித்திருக்கிறார். இவரது க்யூட்டான கிறிஸ்துமஸ் புகைப்படம் இதோ. 

8 /8

கீர்த்தி சுரேஷ் எப்போதும் தனது செல்ல நாயுடன் நேரம் செலவிடுவது வழக்கம். அந்த வகையில், கிறிஸ்துமஸ் மரத்துக்கு அருகில் குட்டி நாயுடன் நின்று அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம்.