ராம்குமார் இயக்கிய விஷ்ணு விஷாலின் (Vishnu Vishal) 'ராட்சசன்' (Ratsasan) என்ற தமிழ்ப் படம்  ஐ.எம்.டி.பி இணையத்தில் அதிக புள்ளிகளைப் பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளது. க்ரைம் த்ரில்லர், சிறந்த கதைக்களத்தையும், ஈர்க்கக்கூடிய திரைக்கதையையும் கொண்டுள்ளது, இது 2018 ஆம் ஆண்டின் பிளாக்பஸ்டர் வெற்றிகளில் ஒன்றாகும். ஜிப்ரான் இசையமைத்த இப்படத்தை ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி தயாரித்திருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு கிடைத்தது. தனது படங்களில் அதிக வசூலை ஈட்டிய படம் என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். இதன் தெலுங்கு ரீமேக்கிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.


 


ALSO READ | நடிகர் விஷ்ணு விஷாலுடன் எனக்கு காதலா?; மனம் திறக்கும் பிரபல வீராங்கனை...


இதனிடையே, 'ராட்சசன்' சத்தமின்றி இன்னொரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஐ.எம்.டி.பி இணையத்தில் தமிழ்ப் படங்களில் அதிக புள்ளிகளைப் பெற்ற படம் என்ற சாதனையைப் பெற்றுள்ளது. 'ராட்சசன்' படத்துக்குப் பிறகு 'விக்ரம் வேதா', 'நாயகன்', 'அன்பே சிவம்', 'பரியேறும் பெருமாள்' ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன. 



ஐஎம்டிபி உலகின் மிகவும் பிரபலமான ஆன்லைன் மூவி தரவுத்தளமாக கருதப்படுகிறது, இது படங்களையும் மதிப்பாய்வு செய்கிறது. இந்தச் சாதனையால் படக்குழுவினர் பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 


அதே போல் இந்தியப் படங்கள் வரிசையில், 'ராட்சசன்' படத்துக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது. 'பதேர் பாஞ்சாலி', 'கோல்மால்' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'ராட்சசன்' இடம்பெற்றுள்ளது. 'ராட்சசன்' படத்தைத் தொடர்ந்து 'விக்ரம் வேதா', 'நாயகன்' ஆகிய படங்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR