மதுரையை சேர்ந்த நடிகரான ஹரிவைரவன் (38) வெண்ணிலா கபடி குழு-1 மற்றும் வெண்ணிலா கபடி குழு -2 , குள்ளநரிக்கூட்டம் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தில் விஷ்ணுவிஷாலின் நண்பராக கபடி குழுவில் நடித்த நடிகரான ஹரிவைரவனின் நடிப்பு அந்த திரைப்படத்தில் முக்கிய இடம் பிடித்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று படத்தின் வெற்றிக்கு உதவியது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் கிட்னியில் பிரச்னை இருப்பதாக கூறப்பட்டது. அதற்கான சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றிரவு உடல்நலக்குறைவால் காலமானார் ஹரி .


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் ஹரிவைரவனின் உடலானது மதுரை கடச்சனேந்தல் முல்லைநகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர் ஹரிவைரவனுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு கவிதா (30) என்ற பெண்ணுடன் திருமணமாகிய நிலையில் 2 வயதில் யோஷினிஸ்ரீ என்ற பெண் குழந்தையும் இருக்கிறார்.


இந்தச் சூழலில் ஹரி வைரவனின் குழந்தை கல்வி செலவை தான் ஏற்றுக்கொள்வதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 6 மாதங்களாக ஹரிவைரவனுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.



முன்னதாக, தமிழ்நாடு நடிகர் சங்கம் உயிரிழந்த நடிகர் ஹரிவைரவனின் குழந்தை மற்றும் குடும்பத்தின் வாழ்வாதரத்திற்கு பொருளாதார ரீதியாக உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என ஹரிவைரவனின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க  | பூஜையுடன் தொடங்கும் தளபதி 67! லோகி யூனிவெர்சில் உருவாகிறதா?


மேலும் படிக்க | பாலாவுக்கு பலத்த அடி?... வணங்கானிலிருந்து வெளியேறினார் சூர்யா... என்னதான் நடந்தது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ