'விவேகம்' படத்தின் அனைத்துப் பாடல்களும் இன்று மாலை வெளியாகும் என்று அப்படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குனர் சிவா-அஜித் காம்போவில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படம் விவேகம். அனிருத் இசையமைக்கிறார். விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 


இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் ஏற்கனவே வெளியாகி வைரலாகி இருந்தன. அதேபோல், இப்படத்தின் மூன்று பாடல்கள்(சர்வைவா, தலைவிடுதலை, காதலடா) வெளியாகி செம ஹிட் ஆனது.


‘விவேகம்’ படத்தின் விநியோக உரிமையை கைப்பற்ற விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வந்தது.


இந்நிலையில் தற்போது படத்தின் அனைத்து பாடல்களும் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று இயக்குனர் சிவா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.