பாகுபலிக்கு இணையாக விவேகம்!
தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் "விவேகம்" படத்தின் காட்சிகள் எஸ்.எஸ். ராஜமௌலியின் மெகா-பிளாக்பஸ்டர் "பாகுபலி" காட்சிகளுக்கு இணையாக வந்துள்ளதாக திரைப்பட தொகுப்பாளர் அந்தோணி எல் ரூபன் கூறியுள்ளார்.
அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விவேகம். இத்திரைப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப வல்லுநர்கள் உலக வர்க்க முடிவுகளை வழங்கியதாக ரூபன் கூறினார்.
"விவேகம்" படத்தில் பணியாற்றி படத்தொகுப்பாளர் ரூபன் அவரது கருத்துகளை தற்போது பகிர்ந்துள்ளதாவது, "விவேகம்" படத்தில் பணியாற்றியது திருப்திகரமாக இருப்பதாகத் அவர் தெரிவித்துள்ளார். படத்தொகுப்பில் பல அடுக்குகள் அம்சங்கள் நிறைந்து இருப்பதாகவும், இப்படத்தில் பணியாற்றியது மனநிரைவாக இருபதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ''இதுவரை நான் படத்தொகுப்பு செய்த படங்களில் மிகச் சவாலான படமாகவே விவேகம் அமையும்'' நான் இதுவரை முப்பது படங்கள் வரை வேலை செய்துள்ளேன், ஆனால் இந்த படம் எதுவுமே "விவேகம்" படத்திற்கு சமமாக இல்லை." என தெரித்துள்ளார்.
"விவேகம்" ஆகஸ்ட் 24 அன்று வெளியகவுள்ளது. தற்போது இயக்குனர் அட்லீயின் "மெர்சல்" படத்தின் வேலைகளையும் பார்த்து வருகிறேன் விரைவில் ரசிகர்களுக்கு விருந்து படைக்க இரண்டு படங்களும் முனைப்பில் உள்ளது என தெரிவித்தார்.