பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தில் ஒரு முக்கிய கதபாத்திரத்தில் நடிக்க நடிகர் விவேக் ஒப்பந்தமாகி இருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வருகிற மே 1-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதனைத்தொடர்ந்து, சிவகார்த்திகேயன் ரவிக்குமார் இயக்கத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் நடித்து வருகிறார்.


பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா, கே.ஜி.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் இணைந்து தயாரிக்கின்றனர். `ஹீரோ' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அர்ஜூன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்ஷன், இவானா நாயகிகளாக நடிக்கின்றனர்.


இந்த நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க காமெடி நடிகர் விவேக் ஒப்பந்தமாகி இருக்கிறார்.