நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியாகி சரியாக 25 நாட்களைக் கடந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கலவையான விமர்சனங்கள், அடுத்தடுத்த புதிய படங்களின் அணிவகுப்பு , பீஸ்ட் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு என பல விஷயங்கள் இருந்தபோதும் இன்னும்கூட பீஸ்ட் படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டுதான் உள்ளது.


அந்த வகையில் இப்படம் வசூலில் பல சாதனைகளைப் படைத்துவருகிறது. நடப்பாண்டில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படம் எனும் சிறப்பைப் பெற்றுள்ள பீஸ்ட் உலகளவில் 250 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாம். இந்நிலையில் இப்படத்தின் வாயிலாக நடிகர் விஜய் வசூலில் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.


                                                                             


அதாவது, தொடர்ச்சியாக 250 கோடி வசூலைப் பெறும் விஜய்யின் 5ஆவது படம் எனும் சிறப்பை இப்படம் பெற்றுள்ளது. அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம்தான் விஜய்க்கு 200 கோடி ரூபாய் வசூலைத் தொடங்கிவைத்த முதல் படம். மெர்சல் சுமார் 267 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம்.


விஜய்க்கு முதல் 100 கோடி ரூபாய் வசூல் படமாக அமைந்த துப்பாக்கியை இயக்கிய ஏ.ஆர்.முருதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த சர்கார் சுமார் 258 கோடி ரூபாய் கலெக்சன் ஈட்டியதாம். அட்லி இயக்கத்தில் மீண்டும் நடித்த பிகில் விஜய்க்கு முதல் 300 கோடி ரூபாய் வசூலைத் தந்த படம். சுமார் 321 கோடி ரூபாய் வசூலை அப்படம் ஈட்டியதாகக் கூறப்படுகிறது.


                                                               


மேலும் படிக்க| அடுத்தடுத்த வெற்றி.. ‘ஜெட்’ வேகத்தில் சம்பளத்தை உயர்த்திய ‘KGF’ டைரக்டர்! - அதுவும் இத்தனை கோடியா?


 


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டரும் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாம்.  இந்த நிலையில்தான் பீஸ்ட்டும் 250 கோடி ரூபாய் வசூல் பட்டியலில் இணைந்துள்ளது. தொடர்ந்து 5ஆவது முறையாக இச்சாதனையை நிகழ்த்தியுள்ளதால் தான் ஒரு பாக்ஸ் ஆஃபிஸ் கிங் என மீண்டும் ஆணித்தரமாக நிரூபித்தார் நடிகர் விஜய்.


மேலும் படிக்க | ராஜமெளலி படத்தில் நடிப்பவர்களைத் துரத்தும் வித்யாசமான சோகம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR