அடுத்தடுத்த வெற்றி.. ‘ஜெட்’ வேகத்தில் சம்பளத்தை உயர்த்திய ‘KGF’ டைரக்டர்! - அதுவும் இத்தனை கோடியா?

இயக்கிய மூன்றே படங்களில்  இந்தியா முழுக்கப் பிரபலமைடைந்துவிட்ட பிரசாந்த் நீல், தனது சம்பளத்தைத் தற்போது வெகுவாக உயர்த்தியுள்ளாராம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 3, 2022, 06:16 PM IST
  • இயக்கியது மூன்றே படங்கள்; ஆனால் இந்தியா முழுக்கப் பிரபலமைடைந்துவிட்டார் பிரசாந்த் நீல்.
  • கே.ஜிஎஃப்- 2 வசூல் ரீதியாகப் பல சாதனைகளைப் படைத்துவருகிறது.
  • இயக்குநர் பிரசாந்த் நீல் தனது சம்பளத்தை வெகுவாக உயர்த்தியுள்ளாராம்.
அடுத்தடுத்த வெற்றி.. ‘ஜெட்’ வேகத்தில் சம்பளத்தை உயர்த்திய ‘KGF’ டைரக்டர்! - அதுவும் இத்தனை கோடியா? title=

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் அண்மையில் வெளியான கேஜிஎஃப்- 2 திரைப்படம் வசூல் ரீதியாகப் பல்வேறு சாதனைகளைப் படைத்துவருகிறது. 

நடிகர்கள் யஷ் மற்றும் சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இந்தக் கன்னடப் படம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா ரிலீஸாக வெளியானது. தற்போது வரை 1000 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் மழை பொழிந்துள்ள இப்படம் கன்னட சினிமாவுக்கு, பான் இந்தியா ரிலீஸ் ரேஸில் ஒரு புதிய வாசலைத் திறந்துவிட்டிருக்கிறது எனலாம்.

                                                                    KGF-2

இயக்குநர் ராஜமெளலி எப்படித் தனது பாகுபலி படங்களின் வாயிலாக தெலுங்கு சினிமாவின் பான் இந்தியா ரிலீஸைப் பலப்படுத்தினாரோ அதைத் தற்போது கன்னடத்தில் செய்துகாட்டியுள்ளார் இயக்குநர் பிரசாந்த் நீல். இயக்கியது வெறும் மூன்றே படங்கள்; அவற்றில் இரண்டு படங்கள் கேஜிஎஃப் சீரிஸ்தான். ஆனால் அதற்குள்ளாக இந்தியா முழுக்கப் பிரபலமைடைந்துவிட்டார் பிரசாந்த் நீல்.

                                                             Prasanth Neel

கே.ஜி.எஃப்பைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தை இயக்கிவரும் அவர், அடுத்ததாக ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ள அவரது 31ஆவது படத்தை இயக்கவுள்ளார். இவை இரண்டும் தெலுங்குப் படங்கள். இந்நிலையில் தான் இயக்கும் படங்களுக்கு நல்ல மவுசு இருந்துவருவதால் தனது சம்பளத்தைத் தற்போது வெகுவாக உயர்த்தியுள்ளாராம் பிரசாந்த் நீல்.

மேலும் படிக்க | நடிகை மஞ்சு வாரியர் கடத்தலா?! - நடந்தது என்ன? பரபரக்கும் சினிமா உலகம்!

கேஜிஎஃப் படங்களைத் தயாரித்த ஹோம்பேல் ஃபில்ம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சலார் படத்துக்கு 25 கோடி ரூபாய் சம்பளம் பெறவுள்ள அவருக்கு படத்தின் லாபத்திலும் ஒரு பங்கு உண்டாம். இதையடுத்து அவர் இயக்கவுள்ள அடுத்த இரு படங்களுக்கும் தலா 50 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

                                                  salaar

 

இதனால் தென்னிந்திய இயக்குநர்களில் ராஜமெளலிக்குப் பிறகு அதிக சம்பளம் வாங்கும் இயக்குநராகத் தற்போது உருவெடுத்துள்ளார் பிரசாந்த் நீல். 1000 கோடி ரூபாய் அளவுக்கு வசூலிக்கும் படங்களை இயக்கும் பிரசாந்த் நீல் போன்றவர்களுக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் கொடுப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை எனக் கூறுகிறது திரையுலகம்!

மேலும் படிக்க | ராஜமெளலி படத்தில் நடிப்பவர்களைத் துரத்தும் வித்யாசமான சோகம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News