புதுடெல்லி: இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் "வார்" படம் தொடர்ந்து கலக்கி வருகிறது. ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர் நடித்துள்ள இந்த படம் ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளை செய்து வருகிறது. இந்த படம் வெளியாகி நேற்றுடன் 13 நாட்களை கடந்து விட்டது. இதுவரை வார் படம் 400 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படத்தின் உலக முழுவதும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் 406.5 கோடியை எட்டியுள்ளது. (இந்தியா வசூல் 332 கோடி + வெளிநாடு வசூல் 79.5 கோடி). இந்த படத்தை தயாரித்த யஷ் ராஜ் பிலிம்ஸ் அளித்த தகவலின் படி, திங்களன்று இந்தியாவில் "வார்" படம் நல்ல வசூலை செய்துள்ளது. அதாவது 13 வது நாளன நேற்றும் 4.75 கோடி (இந்தி - 4.40 கோடி மற்றும் தமிழ், தெலுங்கு - 0.35 மில்லியன்) வசூல் ஆகியுள்ளது. நாடு முழுவதும் இந்தியில் மட்டும் மொத்த வசூல் 276.40 கோடி வசூல் செய்துள்ளது. இந்த படம் சல்மான் கானின் "பாரத்" (Bharat) படத்தின் வருவாயின் சாதனையை முறியடித்துள்ளது.


 



இந்த படத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷிராஃப் தவிர, வாணி கபூர், அனுப்ரியா மற்றும் தீபனிதா சர்மா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்தியை தவிர, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.