வேண்டாம் என்று சொன்னால் கேட்கமாட்டர்கள் - படுகாயம் அடைந்த அஜித் ரசிகர்கள்: வீடியோ
அஜித் கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதி
இயக்குநர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக தல அஜித் நடித்து இன்று திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கும் படம் தான் "விஸ்வாசம்". இன்று படம் திரைக்கு வந்துள்ளதால், தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் காலை முதலே தியேட்டர்கள் முன்பு குவிந்த வண்ணம் உள்ளனர். பல இடங்களில் தல அஜித்தக்கு பேனர் மற்றும் கட் அவுட்டுகள் வைத்து வருகின்றனர். அந்த பேனர் மற்றும் கட் அவுட்டுகளுக்கு பால் அபிஷேகம் மற்றும் கற்பூரம் கொளுத்தி பூஜையும் செய்து வருகின்றனர். ஒரே கொண்டாடத்தில் ரசிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், இன்று விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள தியேட்டருக்கு வெளியே தல அஜித்துக்கு சுமார் 20 அடி உயரத்தில் கட்-அவுட் வைக்கப்பட்டு உள்ளது. காலை காட்சிக்கு வந்த, அந்த ஏரியா ரசிகர்கள், தல அஜித் கட்-அவுட் மீது ஏறி பால் அபிஷேகம் செய்தனர். கிட்டத்தட்ட ஏழு-எட்டு பேர் கட்-அவுட் மீது ஏறி பால் அபிஷேகம் செய்த போது, திடிரென கட்-அவுட் கீழே சரிந்து விழுந்தது. அதில் தல அஜித் ரசிகர்கள் ஐந்து பேர் பலத்த காயம் அடைந்தனர். காயம் அடைந்த அவர்களை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் அங்கு பரபரபப்பு ஏற்ப்பட்டது. இதுக்குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.