Rocketry: The Nambi Effect: நம்பி நாராயணனின் பயோபிக் படமான "ராக்கெட்ரி" திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டது. இந்த படத்தை ஆர். மாதவன் நாயகனாகவும் நடிப்பதோடு மட்டுமில்லாமல் இயக்கியும் வருகிறார். இந்த படம் இந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் படமாக்கப்பட்டுள்ளது, இது முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இந்த படம் மூலம் ஆர். மாதவன் எழுத்தாளர் மற்றும் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பாத்திரத்திற்காக ஒரு தீவிரமான உடல் மாற்றத்திற்கு ஆளான மாதவன், 27 முதல் 70 வயது வரையிலான நம்பி நாராயணனை சித்தரிப்பார். இப்படத்தின் தமிழ் பதிப்பில் நடிகர் சூர்யா பத்திரிகையாளராக கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். இந்தி பதிப்பின் இதேபாத்திரத்தில் ஷாருக் கான் நடுத்துள்ளார். ஆறு நாடுகளுக்கு மேல் படமாக்கப்பட்ட ராக்கெட்ரி கடந்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் COVID-19 காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.


நடிகர் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். மேலும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் மாதவனுடன் மீண்டும் நடிகை சிம்ரன் இணைந்துள்ளார். இந்த படத்தில் பல ஹாலிவுட் நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர்.


வெல்லம் என்ற மலையாள திரைப்படத்தை இயக்கிய பிரஜேஷ் சென் இணைந்து இயக்கியுள்ளார் இப்படத்தை ஸ்ரீஜேஷ் ராய் படமாக்கியுள்ளார். எடிட்டிங் பிஜித் பாலா, சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.


 



இந்த படத்தின் ட்ரெய்லரில் வரும் ஒவ்வொரு வசனங்களும், காட்சிகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR