நெஞ்சத்தை கிள்ளாதே இன்றைய அப்டேட்: மதுவுக்கு காத்திருந்த ஏமாற்றம்.. வார்த்தையால் வந்த சோகம்..
Nenjathai Killathe Today (28.08.2024) Episode: இன்றைய நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் எபிசோட்டில் அடுத்து என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
Nenjathai Killathe TV Serial: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நெஞ்சத்தை கிள்ளாதே. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கௌதம் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது கௌதம் ஹாஸ்பிடலில் இருக்க ஸ்னேகா ஜெயிலில் இருக்கிறாள், அவளது லாயர் வந்து ஜாமீன் கிடைக்கவில்லை. உங்களை கோர்ட்டில் ஆஜர் படுத்திய பிறகு ஜாமீன் வாங்கி கொள்ளலாம் என்று சொல்கிறார், எதுக்கு சார் இப்படி பண்றாங்க? எதுக்கு கேட்க பெரிய இடத்தில மோதிட்டோம் என்று சொல்கிறார்.
மறுபக்கம் மதுமிதா மெஹந்தி பங்ஷனுக்கு ரெடியாகி கொண்டிருக்க அதிதி அவளுக்கு மேக்கப் போட்டு விட ரேணுகா எதுக்கு அவளுக்கு இன்னும் மேக்கப் போட்டுட்டு இருக்க அவ ஏற்கனவே அழகாக தானே இருந்தா என்று சொல்கிறாள். பிறகு இவர்கள் எல்லாரும் மெஹந்தி பங்ஷனுக்காக கௌதம் வீட்டிற்கு கிளம்பி வருகின்றனர்.
கௌதம் வீட்டிற்கு வந்ததும் மதுமிதாவின் பாட்டி மாப்பிள்ளை எங்கே என்று கேட்க கௌதம் பாட்டி அவன் பிசினஸ் மேன் அவனுக்கு 1000 வேலை இருக்கும், வந்துடுவான் என்று சொல்கிறாள். பிறகு சகுந்தலாவை கூப்பிட்டு கௌதம் எங்கே? நீ போன் பண்றியா? நானே பண்ணவா என்று கேட்க மாமியாருக்கு பயந்து நானே பண்ணுறேன் என்று சொல்கிறாள்.
மறுபக்கம் ரேணுகா மதுவிடம் மாப்பிளைக்கு போன் பண்ணு என்று சொல்ல மது கௌதமுக்கு போன் செய்ய கௌதம் எடுக்காமல் இருக்க சந்தோஷ் திட்டிய பிறகு போனை எடுத்து மீட்டிங்கில் இருப்பதாக பொய் சொல்கிறான். இதனால் மதுமிதா சோகமடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
மேலும் படிக்க - AMMA நடிகர் சங்க தலைவர் மோகன்லால் ராஜினாமா... திரையுலகில் அதிர்ச்சி - அடுத்தது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ