வாவ்.. இதை தான் எதிர்பார்த்தோம், ரசிகர்களை கொண்டாட வைத்த நெஞ்சத்தை கிள்ளாதே ப்ரோமோ - விஷயம் என்ன?
Latest Promo Of Nenjathai Killathe : வாவ்.. இதை தான் எதிர்பார்த்தோம், ரசிகர்களை கொண்டாட வைத்த நெஞ்சத்தை கிள்ளாதே ப்ரோமோ - விஷயம் என்ன?
Nenjathai Killathe TV Serial: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று நெஞ்சத்தை கிள்ளாதே. ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடிக்கும் இந்த சீரியலில் ரேஷ்மா நாயகியாக நடித்து வருகிறார். மேலும் ரேகா கிருஷ்ணப்பா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த சீரியலின் கதைக்களம் கௌதம், மதுமிதா கல்யாணத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில் கௌதம், மதுமிதாவின் கல்யாணம் நல்லபடியாக நடந்து முடிவது போலவும் பிறகு மதுவின் அப்பா அம்மா 25 சவரன் நகையும் 25 லட்சம் பணத்தையும் வரதட்சணையாக கொடுக்க கௌதம் அதிர்ச்சி அடைகிறான்.
யார் உங்ககிட்ட வரதட்சணை கேட்டது என்று கேள்வி கேட்க மதுவின் அப்பா யாரும் இல்ல மாப்பிள்ளை என்று சமாளிக்கிறார். ஆனால் கௌதம் யாருனு நீங்களா உண்மையை ஒத்துக்கோங்க என்று சத்தம் போடுகிறான். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் இதை தான் எதிர்பார்த்தோம் என்று திருமணம் குறித்து மகிழ்ச்சியாக பதிவு செய்து வருகின்றனர்.
அதே போல் சகுந்தலா கண்டிப்பா மாட்டனும் என்றும் தங்களது எதிர்பார்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர், இனி நடக்க போவது என்ன என்பதை அறிந்து கொள்ள நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
மேலும் படிக்க | தீபாவின் கண் எதிரே கார்த்திக்குக்கு கல்யாணம் நடக்குமா? பரபரப்பான கார்த்திகை தீபம் எபிசோட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ