புஷ்பா 2 ட்ரைலர்: தெறிக்கும் ஆக்ஷன் மிரட்டல்.. அல்லு அர்ஜுன் போட்ட வெடிகுண்டு!

Watch Pushpa 2: The Rule Trailer: பாட்னாவில் புஷ்பா 2 டிரெய்லர் வெளியிடப்பட்டது. புஷ்பா 2 பாகத்தில் இயக்குனர் சுகுமார் தனது முத்திரையை பதிக்க உள்ளார். புஷ்பா 2 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை காண திரண்ட ரசிகர்கள்.
Pushpa 2: The Rule Trailer Launch in Patna: அல்லு அர்ஜுன் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்படும் புஷ்பா 2: தி ரூல் (Pushpa 2: The Rule) திரைப்படம் ரிலீஸுக்கு இன்னும் ஓரிரு வாரங்களே உள்ள நிலையில், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது.
இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. புஷ்பா 2: தி ரூல் படத்தின் ட்ரெய்லருக்கு கிடியத்த வரவேற்பை பார்த்தால், புஷ்பா படத்தின் முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வெற்றி அடையும் எனத் தெரிகிறது. தற்போது புஷ்பா 2: தி ரூல் படத்தின் ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
முன்னதாக கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா 2: தி ரூல் படத்தின் 'முன்னோட்ட வீடியோ' மற்றும் 'ஃபர்ஸ்ட் லுக்' வெளியானது. இந்தாண்டு பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா 2: தி ரூல் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதல் பாகத்தில் அல்லு அர்ஜுன் சந்தன மரக்கடத்தல்காரர் கதாபாத்திரத்திலும் 'புஷ்பா ராஜா'கவும், அவருக்கு மனைவியாக நடிகை ராஷ்மிகா மந்தனா 'ஸ்ரீ வள்ளி' கதாபாத்திரத்திலும், ஃபஹத் பாசில் போலீஸ் வேடத்திலும் நடித்திருந்தனர். அல்லு அர்ஜுன் மற்றும் ஃபஹத் பாசில் கதாபாத்திரங்களுக்கிடையில் வெடிக்கும் மோதலுடன் முதல் பாகம் முடிவடைந்த நிலையில், இரண்டாம் பாகம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதே வேளையில், புஷ்பா 2 படத்தில் நடிகர் ஸ்ரீ லீலா ஒரு சிறப்பு பாடலில் தோன்றுவார் என்று அறிவிக்கப்பட்டது. முதல் பாகத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று பிரபல நடிகை சமந்தா நடனமாடி சூப்பர்ஹிட்டான "ஊ அண்டாவா.." மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இரண்டாம் பாகத்தில் இளம் நடிகை ஸ்ரீ லீலா குத்து பாட்டுக்கு நடனமாடியிருக்கிறார்.
பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள புஷ்பா 2: தி ரூல் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சுகுமார் இயக்கியுள்ளார். தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர் இந்தியா முழுவதும் புஷ்பா படத்ட்டிற்கு புரோமோசன் ஷெய்கு வருகிறது. அந்த வரிசையில் புஷ்பா 2 இன் டிரெய்லர் பாட்னாவில் வெளியிடப்பட்டது.
மேலும் படிக்க - கீர்த்தி சுரேஷிற்கு டிசம்பரில் திருமணம்?! 34 வயது இசையமைப்பாளர் மாப்பிள்ளையா?
மேலும் படிக்க - “சூர்யாவை பார்த்து பெருமைப்படுகிறேன்” கங்குவா நெகடிவ் விமர்சனத்திற்கு ஜோதிகா பதிலடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ