Viral Video: குழந்தை கெட்-அப்பில் குடும்பத்துடன் கும்மாளம் போடும் ரோபோ சங்கர்..!
Robo shankar Viral video: பிரபல காமெடி நடிகர் ரோபாே சங்கர், தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிதாக ஒரு வீடியாேவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகின்றன.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் ரோபோ சங்கர். இவர் சில நாட்களுக்கு முன்பு வெகுவாக உடல் எடை மெலிந்து காணப்பட்டார். தற்போது இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். இன்ஸ்டா பக்கத்தில் புதிதாக ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தை சுழன்றடித்து காெண்டிருக்கின்றது.
குழந்தையாக மாறிய ரோபா சங்கர்..
சிரிப்பான பேச்சுக்கும் நகைச்சுவையான செயல்பாடுகளுக்கும் பெயர் போனவர் ரோபாே சங்கர். மிமிக்கிரி செய்வது, பிறரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வைகயில் உடல் மொழியை மாற்றுவது என பல வகையான செயல்பாடுகளில் ஈடுபட்டு அனைவரையும் மகிழ்விப்பார். இவரும் இவர் குடும்பமும் அடிக்கும் லூட்டிகளை அவ்வப்போது வீடியோவாக எடுத்து இன்ஸ்டா பக்கத்தில் இவர்கள் வெளியிடுவது வழக்கமம். அப்படி ஒரு வீடியோவை அவர் தற்போது வெளியிட்டுள்ளார். அதில் குழந்தை போல வேடம் போட்டு நடனமாடியுள்ளார்.
மேலும் படிக்க | STR50 படத்தின் இயக்குனர் இவரா? ஆச்சர்யத்தில் திரையுலகம்!
வைரல் வீடியோ..
ரோபோ சங்கர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், அவரும் அவர் குடும்பத்தினரும் சேர்ந்து நடனமாடியுள்ளனர்.
ரோபாே சங்கர் அரை டவுசரும் டி-சர்டும் போட்டவாறும் தலையில் ஒரு குடிமி போட்டுக்கொண்டும் பக்கா குழந்தை போஸில் நடனமாடுகிறார். பின்னர், இவருடன் நடனத்தில் இணையும் இவரது குடும்பத்தினர், “காஞ்சிபுரம் போவோம்..காமாட்சிய பாப்பாேம்..” என்ற பாடலுக்கு நடனமாடுகின்றனர். சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. சில திரை பிரபலங்கள் கூட இந்த வீடியோவில் கமெண்ட் செய்துள்ளனர்.
உடல் மெலிந்த ரோபாே சங்கர்..
பல நிகழ்ச்சிகளுக்கு முகமாக இருந்தவர், ரோபா சங்கர். டிவி நிகழ்ச்சிகளில் இருந்து மெல்ல மெல்ல வெள்ளித்திரைக்கு சென்றார். ஜைஜான்டிக் உடலுடன் பலரை சிரிக்க வைத்தபடி வலம் வந்த ரோபோ சங்கர், சில மாதங்களுக்கு முன்னர் மிகவும் மெல்லிய உடலுடன் காணப்பட்டார். இதற்கான காரணத்தை அவரே சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். ரோபோ, தனது தனித்திறமைகள் மூலம் அடையாளம் காணப்பட்டாலும், மக்கள் இவரது கட்டுமஸ்தான உடலமைப்பை வைத்துதான் இவரை அடையாளம் கண்டுகொண்டனர். சுமார் 15 ஆண்டுகளாக ரேபாே சங்கரை, இப்படியே பார்த்து மகிழ்ந்த மக்களுக்கு திடீரென இவரை ஒல்லியாக பார்த்ததும் தூக்கி வாரி போட்டுவிட்டது. இவர் ஒல்லியாக உள்ள போட்டோக்களும் வீடியோக்களும் இணையத்தில் சுழல, “ரோபாே சங்கருக்கு வியாதி, ஏதோ நோய்..” போன்ற தகவல்களும் பகிரப்பட்டன.
என்ன காரணம்?
ரோபோ சங்கர், சில மாதங்களுக்கு முன்பாகவே உடல் எடை குறைக்கும் முயற்சியாக டயட் இருக்க ஆரம்பித்துள்ளார். அப்போது அவரை மஞ்சள் காமாலை நோய் தாக்கி உள்ளது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிக்கொண்டிருந்த இவரது உடல் எடை அப்படியே சர்ரென சரியத்துவங்கியது. இதுதான் அவரது உடல் எடை குறைய காரணம் என அவரே ஒரு விழா மேடையில் கூறினார்.
ரோபோ சங்கரின் மகளுக்கு திருமணம்?
ரோபோ சங்தரின் மகள் இந்திரஜா சங்கர், அவரது இன்ஸ்டா பக்கத்தில் “மாமா மாமா..” என யாரையோ வைத்து போஸ்ட் போட்டுக்கொண்டிருந்தார். இந்திரஜாவுடன் க்ளோசாக இருக்கும் அந்த நபர், ரோபாே சங்கரின் குடும்பத்தாருடனும் மிகவும் நெருக்கமாக இருக்கிறார். இதனால், இந்திரஜாவிற்கு விரைவில் திருமணம் என்ற வதந்தி எழுந்தது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவரா..? செம ஷாக்கில் ரசிகர்கள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ