இளைஞர்களின் அமைதி போராட்டம் பெருமையாக இருக்கிறது - ஏ.ஆர்.ரஹ்மான்
இளைஞர்களின் அமைதியான போராட்டத்தைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது என்று இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.
திரையுலக பிரபலங்கள் பலரும் இப்போராட்டத்துக்கு தங்களுடைய முழு ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள். இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்திருந்தார்.
தற்போது பேசிய அவர் கூறியதாவது:-
காலை 4:30 மணிக்குப் பிறகு இப்போது தான் ஜூஸ் அருந்தவுள்ளேன். மகன் அமீனும் என்னோடு உண்ணாவிரதம் இருந்தார். இளைஞர்களின் அமைதியான போராட்டத்தைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. அனைத்தும் நல்லபடியாக முடிவு வரும் என நம்புகிறேன்" என்று பேசினார்.மேலும் தனது பேச்சின் இடையே "தமிழா.. தமிழா கண்கள் கலங்காதே" என்ற பாடலை சில வரிகள் பாடினார்.