Most Impressed Ramar Character in Indian Cinema News in Tamil : உத்திர பிரதேசத்தில் உள்ள அயோத்தியில், இன்று பிரம்மாண்டமான அளவில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ளது(Ayodhya Ram Mandir). இதையொட்டி, ராமர் குறித்த செய்திகளும் இராமாயணம் குறித்த செய்திகளும் ட்ரெண்டாகி வருகின்றன. இதையடுத்து, தமிழில் மட்டுமன்றி தென்னிந்திய அளவில் ராமராக தோன்றி ரசிகர்களை கவர்ந்த ஹீரோக்கள் குறித்து இங்கு காண்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

என்.டி.ஆர்:


தமிழில் நடிகர் எம்.ஜி.ஆர் போல, தெலுங்கு திரையுலகில் பெரிய நடிகராக விளங்கியவர், என்.டி.ராமா ராவ். இவர், ராமர் கதாப்பாத்திரத்தில் பல படங்களில் நடித்துள்ளார். லவ குசா, ஸ்ரீ ராமாஞ்சனேய யுத்தம், சீதா ராமா கல்யாணம் உள்ளிட்டவை இவர் ராமராக நடித்ததில் ஹிட் அடித்த படங்கள் ஆகும். ராமராக மட்டுமன்றி, இவர் பல தெய்வங்களின் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். 


ஜூனியர் என்.டி.ஆர்:


ஆர்.ஆர்.ஆர். படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர், 1997ஆம் ஆண்டு தனது சிறு வயதில் ‘பால ராமாயணம்’ எனும் தெலுங்கு படத்தில் ராமராக நடித்தார். அந்த ஆண்டின் சிறந்த குழந்தைகள் படத்திற்கான தேசிய விருது, இப்படத்திற்கு கிடைத்தது. 


மேலும் படிக்க | ரஜினிகாந்த் to ராம் சரண்- ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் தென்னிந்திய பிரபலங்கள்!


ஷோபன் பாபு:


1972ஆம் ஆண்டு வெளியான ‘சம்பூரண ராமாயணம்’ படத்தில் ராமராக நடித்திருந்தவர், ஷோபன் பாபு. ராமர், 14 வருடம் வனவாசத்திற்கு சென்றிருந்த போது நடந்த கதையை காண்பிக்கும் படம் இது. இதில், நடிகை சந்திரகலா சீதையாக நடித்திருந்தார். 


நந்தமுரி பாலகிருஷ்ணா:


ரசிகர்களால், ‘பாலைய்யா’ என்று அழைக்கப்படுபவர், நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர், என்.டி.ராமா ராவின் 6வது மகனான நந்தமுரி பாலகிருஷ்ணா  ‘ஸ்ரீ ராம ராஜ்யம்’ என்ற படத்தில் ராமராக நடித்திருந்தார். இந்த படத்தில் சீதை கதாப்பாத்திரத்தில் நயன்தாரா நடித்திருந்தார். 


ஆதி புருஷ்:


பான் இந்தியா அளவில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான படம், ஆதி புருஷ். ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில் ராமர் கதாப்பாத்திரத்தில் பிரபாஸ் நடித்திருந்தார். ஓம் ராவத் இயக்கியிருந்த இந்த படத்தில் சீதையாக கிருத்தி சனோன் நடித்திருந்தார். பெரும் செலவில் எடுக்கப்பட்டிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பை சம்பாதித்து தோல்வியை தழுவியது. 


குர்மீத் சௌத்ரி:


சுமார் 15 வருடங்களுக்கு முன்பு தமிழில் உள்ள பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ‘ராமாயணம்’ எனும் தொடர் ஒளிபரப்பாகும். இதில், ராமர் கதாப்பாத்திரத்தில் குர்மீத் சௌத்ரி நடித்திருப்பார். இந்தியில் எடுக்கப்பட்ட இந்த தொடர், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டது. இந்த தொடரில், சீதை கதாப்பாத்திரத்தில் டெபினா பானர்ஜி நடித்திருப்பார். சீதை-ராமன் கதாப்பாத்திரத்தில் நடித்த இவர்கள் பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 


அருண் கோவில்:


1997ஆம் ஆண்டு வெளியான ‘ராமாயன்’எனும் இந்தி படத்தில் ராமராக நடித்திருந்தவர், அருண் கோவில்.  அதுவரை ராமர் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த நடிகர்களுள், ரசிகர்களால் ராமராக முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் இவர். ஆனால் இவர் வெகு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். 


மேலும் படிக்க | ஜிவி பிரகாஷ் நடித்துள்ள இடிமுழக்கம் திரைப்படத்திற்கு அங்கிகாரம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ