மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் யார் யார்?
ஜோதிகா தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் ‘மகளிர் மட்டும்’ படம் உருவாகி வெளியாக தயாராக இருக்கிறது.
இப்படத்தை அடுத்து பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘நாச்சியார்’ படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ஜோதிகா. இதில் ஜோதிகா ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அந்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்க இருக்கும் படத்தில் ஜோதிகா, சிம்புவுடன் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், அரவிந்த் சாமி, மலையாள நடிகர் ஃபஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.