41 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாத த்ரிஷா! காரணம் என்ன? அவரே சொன்ன விஷயம்..
Actress Trisha Krishnan Unmarried Reason : தமிழ் திரையுலகில், சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக டாப் நடிகையாக திகழ்பவர், த்ரிஷா. இவருக்கு இன்று பிறந்தநாள். இந்த வயதிலும் இன்னும் இவர் சிங்கிளாக இருக்க காரணம் என்ன?
Actress Trisha Krishnan Unmarried Reason : இந்திய திரையுலகை பொறுத்த வரை, ஹீரோக்களுக்கு பல ஆண்டுகளை கடந்தும் இருக்கும் மவுசு, நடிகைகளுக்கு இருப்பதில்லை. காரணம், நடிகை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் வைத்துள்ள கட்டமைப்புகள் மாறுகையில், அவர்களுக்கு அந்த நடிகை மீதுள்ள ரசனையும் மாறிவிடும். வெகு சில நடிகைகளால் மட்டுமே, வயதான பிறகும் கூட தங்களுக்கு என்றிருக்கும் ரசிகர் பட்டாளத்தை சேகரித்து கொண்டுள்ளனர். அப்படி, பல ஆண்டுகள் கடந்தும் ரசிகர்களின் மனங்களில் கனவுக்கன்னியாக இருக்கும் நாயகி, த்ரிஷா. இவருக்கு இன்று பிறந்தநாள்.
20 வருடங்களாக டாப் நடிகை…
நடிகை த்ரிஷா, தமிழ் திரையுலகில் மட்டுமல்ல தென்னிந்திய அளவில் தற்போது டாப் நடிகையாக இருக்கிறார். மலையாளத்தில் டொவினோ தாமஸ் உடன் ஐடன்டிடி (Identity) படத்தில் நடித்து வரும் இவர், தெலுங்கில் சிஞ்சீவியுடன் விஷ்வம்பரா என்ற படத்தில் நடித்து வருகிறார். அஜித்துடன் இவர் விடாமுயற்சி படத்திலும் கதாநாயகியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
துணை நடிகையாக அறிமுகமாகி இப்போது இந்த அளவிற்கு பெரிய இடத்திற்கு சென்றிருக்கும் த்ரிஷா, தமிழ் மக்களின் நீங்கா இடத்தை பெற்றிருக்கும் நடிகைகளுள் ஒருவர் ஆவார். த்ரிஷா, தனக்கென தனி அரியனையை அமைத்து இவ்வளவு பெரிய இடத்திற்கு சென்றிருந்தாலும், இவரை சுற்றி பலர் ‘நொய் நொய்’ என கேட்டுக்கொண்டிருக்கும் ஒரே கேள்வி, “ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை?” என்பதுதான். இதற்கு அவர் ஒரு முறை நேர்காணலில் பதிலளித்திருந்தார்.
திருமணம் குறித்து பேசிய த்ரிஷா!
நடிகை த்ரிஷா, சில வருடங்களுக்கு முன்பு ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது, அவரிடம் திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், எனக்கே அதற்கான பதில் தெரியவில்லை என்று கூறினார். மேலும், தான் அதற்கு ஏற்ற, தகுதியான ஆளை பார்த்தால் கண்டிப்பாக திருமணம் குறித்து யோசிப்பேன் என்றும் கூறினார். விவாகரத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று கூறிய த்ரிஷா, தனக்கு தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்கள் பலர் மகிழ்ச்சியே இல்லாமல் இருப்பதாகவும் தனக்கு அது போன்ற திருமணம் தேவையில்லை என்றும் கூறினார்.
மேலும் படிக்க | த்ரிஷா இதுவரை சந்தித்த சர்ச்சைகள்! அதுக்குன்னு இவ்வளவா...
காதல் தோல்விகள்?
நடிகை த்ரிஷா, தெலுங்கு நடிகர் ராணா டகுபதியுடன் காதல் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருந்த இவர்கள் பின்னர் காதல் ரிலேஷன்ஷிப்பை தொடங்கினர். ஆனால், இந்த காதல் தோல்வியில் முடிந்தது. அதே போல, 2015ஆம் ஆண்டு நடிகை த்ரிஷாவிற்கு வருண் என்ற தொழிலதிபருடன் திருமணம் நடைபெற இருந்தது. திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்ற நிலையில், இவர்கள் உறவில் விரிசல் விழ, திருமணம் நின்று போனது. இதையடுத்து, த்ரிஷா எந்த காதல் சர்ச்சைகளிலும் சிக்காமலும், சிங்கிளாக-சிம்பிளாகவும் வாழ்ந்து வருகிறார்.
ஷாலாலா பெண்ணாக மாறிய த்ரிஷா!
த்ரிஷா-விஜய் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளியான படம், ‘கில்லி’. இந்த படம், தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ரசிகர்கள் பலர் தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர். இதில், த்ரிஷா ‘ஷாலாலா’ பாடலுக்கு வெள்ளை தாவணி அணிந்து நடனமாடியிருக்கிறார். இதை பல பெண்கள் ரீ-கிரியேட் செய்து வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். த்ரிஷா அனைவரது அன்பிற்கும் நன்றி தெரிவித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
மேலும் படிக்க | HBD Trisha: கோடிகளில் புரளும் கோலிவுட் குயின் த்ரிஷா.. சொத்து மதிப்பு இத்தனையா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ