சென்னை ஆர்கேநகர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட இசையமைப்பாளர் கங்கை அமரன் நியமிக்கப்பட்டடு உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் கங்கை அமரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது:-


மோடியின் உத்தரவுப்படி நடக்கும் ஊழியனாக தொண்டனாக வருவதில் பெருமையடைகிறேன். தமிழகத்தில் என்னை பரிந்துரை செய்த தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.நாங்கள் ஏழை எளிய குடும்பத்தில் பிறந்தவர்கள். சுத்தமான அரசியல்வாதிகள் மட்டுமே உள்ள பாஜக-வில் இருப்பது பெருமைப்படுகிறேன்.


வேட்பாளரானதால் மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இது எனக்கு உற்சாகமாக உள்ளது. சட்டசபையில் எனக்கு நாற்காலி ரெடியாகும் என்ற நம்பிக்கை உள்ளது. மாற்றத்தை கொண்டு வருபவர்கள் யார் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் . இதற்கு பிள்ளையார் சுழி போட்ட மோடி, அமித்ஷா பொன்ராதா, தமிழிசைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நல்லது நடக்கும். 


இவ்வாறு அவர் கூறினார்.