தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போது ஒரு சில நாட்களே எஞ்சியுள்ளது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா, அனிதா மற்றும் ஆஜீத் ஆகியோர் வெளியேறியுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பிக் பாஸ் (Bigg Boss Tamilசீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் தான் உள்ளது. அந்தவகையில் தற்போது ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக நடந்த நான்கு சுற்று போட்டிகளில் ரம்யா 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இதனை அடுத்து ஷிவானி மற்றும் ரியோ ஆகிய இருவரும் 19 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.


ALSO READ | பிக் பாஸ் சோம் சேகரின் செல்ல நாய் திடீர் மரணம்! வீடியோ!


இந்த நிலையில் இன்று ஐந்தாம் சுற்று டாஸ்க் நடைபெறும் காட்சிகள் முதல் புரமோ வீடியோவில் உள்ளன. அதில், பந்து கீழே விழாமல் சுற்ற வேண்டும் என்பதுதான் டாஸ்க். போட்டியாளர்கள் அனைவரும் டாஸ்க்கில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். 


இந்நிலையில் ஆரி (Aari Arjunaமுதலாவதாக அவுட் ஆகி விடுகிறார். அவரை அடுத்து ரம்யா மற்றும் ஷிவானி அவுட் ஆகி விடுகிறார்கள். நான்காவதாக கேபியும், ஐந்தாவதாக சோம் அவுட் ஆக, ரியோ மற்றும் பாலாஜி (Balaji Murugadoss) தாக்குப்பிடித்து விளையாடுகின்றனர். ஆறாவதாக பாலாஜியும் அவுட்டாக ரியோ இந்த சுற்றில் முதலிடத்தை பிடித்து ஏழு புள்ளிகளை பெற்றுள்ளார். அந்த வகையில் ரியோ 19 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில் தற்போது 26 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.


ALSO READ | பிக் பாஸ் 4 இல் மீண்டும் ஓபன் நாமினேஷன்- யார் யாருக்கு ஆப்பு?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR