ஓப்பன் கேட் பிக்சர்ஸ், தயாரிப்பாளர்கள் அன்பு, வினோத், அரவிந்த் வழங்கும், டெனிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் நடிகர்கள் யோகிபாபு, இனியா உள்ளிட்டப் பலர் நடிப்பில் ஜனவரி 25 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘தூக்குதுரை’. இதன் ப்ரீ-ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது. எடிட்டர் ஸ்ரீதர், "படத்தில் இயக்குநர், தயாரிப்பாளர்களுடன் பணிபுரிந்து விடலாம். ஆனால், இந்த மேடை கொஞ்சம் கஷ்டம் தான். எங்களுக்கு மேடையில் பேச கன்டென்ட் இல்லாமல் இல்லை. எனக்கும் இயக்குநருக்கும் நடக்கும் அந்த மேஜிக் ட்ரிக்கை இங்கே சொல்லிவிட்டால் படத்தில் சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடும். அந்த மேஜிக் டிரைய்லரில் இருந்தது போல, நிச்சயம் படத்திலும் இருக்கும். திரையரங்குக்கு வந்து படத்தை பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்" என்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர், " 'தூக்குதுரை' படத்தின் மூலம் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மகேஸ் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். மகேஸ் என்னுடய டான்ஸ் கிளாஸ் மாணவர். எதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அவருடைய இந்த முயற்சிக்கு வாழ்த்துகள்.  தயாரிப்பாளர்கள் அரவிந்த், அன்பு, வினோத் என மூன்று பேருமே எங்களுக்கு நிறைய ஆதரவு கொடுத்தார்கள். படத்திற்கான புரோமோ பாடல் சிரிக்க சிரிக்க நல்ல கான்செப்ட்டோடு வந்திருக்கிறது. படமும் நன்றாக வந்திருக்கிறது. சென்றாயன், பாலசரவணன் இந்தப் பாடலில் குழந்தைகளுக்குப் பிடித்தபடி ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார்கள். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்! படத்தைத் திரையரங்குகளில் பாருங்கள்!"


மேலும் படிக்க | வசூலில் 50 கோடியை கடந்த அயலான்! கோவையில் சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்!


நடிகர் சென்றாயன், “படத்தின் டைட்டில் 'தூக்குதுரை' போலவே படமும் ரொம்ப பாசிடிவாக, நன்றாக வந்துள்ளது. ஜனவரி 25 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர்கள், படக்குழுவினர் என எல்லாருமே தங்களது சிறந்த உழைப்பைக் கொடுத்துள்ளனர். இந்தப் படத்தின் மூன்று தயாரிப்பாளர்களும் நல்ல மனிதர்கள். ’பணத்தைச் சேர்த்து வைத்து படம் தயாரிக்க வந்துள்ளோம். நல்ல படம் வேண்டும்’ என இயக்குநரிடம் கேட்டார்கள். அதுபோலவே வெற்றிப் படத்தை இயக்குநர் கொடுத்துள்ளார். படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம். படத்தைத் திரையரங்குகளில் பார்த்து வெற்றி கொடுங்கள்”.


நடிகர் பால சரவணன், “இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்புக் கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இந்தப் படம் எனக்கு முக்கியமான ஒன்று. படத்தின் தயாரிப்பாளர்கள் மூன்று பேருமே உதவி இயக்குநர்கள் போல, இந்தப் படத்திற்காக இறங்கி வேலைப் பார்த்தார்கள். யோகிபாபு, நான், சென்றாயன் என எல்லோருமே பரபரப்பாக ஒரே நேரத்தில் ஐந்து படங்கள் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்கள்தான். எங்கள் காம்பினேஷன் காட்சியில் டேட்ஸ் பிரச்சினை வரும்போது, மற்ற பட இயக்குநர்களிடம் தன்மையாகப் பேசி பிரச்சினை வராமல் தயாரிப்பாளர்கள் அன்பு, வினோத், அரவிந்த்தான் ஒருங்கிணைத்தார்கள். சிறிய பட்ஜெட் படம் போல இல்லாமல், பெரிய பட்ஜெட் படத்திற்கு எப்படி செலவு செய்வார்களோ அதை எல்லாம் மறுக்காமல் தயாரிப்பாளர்கள் செய்தார்கள். படம் அவர்களுக்காகவே நிச்சயம் பெரிய வெற்றிப் பெறும்".


நடிகர் கூல் சுரேஷ், " நண்பர்களாக அனைவரும் இணைந்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். என்னை ஹீரோவாக வைத்து அடுத்து ஒரு படத்தை எடுக்க போகிறேன் என இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அரவிந்த் சொல்லி இருக்கிறார். தூக்கு முழுவதும் பணமாக சேரும் அளவுக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும். அஜித் சாருடைய அல்டிமேட் கதாபாத்திரப் பெயரை இந்த படத்திற்கு டைட்டிலாக வைத்துள்ளனர். அதனால் நிச்சயமாக அஜித் சார் ரசிகர்களும் இந்த படத்திற்காக ஆதரவு கொடுப்பார்கள். யோகிபாபு, சென்றாயன், பால சரவணன், மகேஸ் இவர்கள் படத்தில் இருப்பதை பார்க்கும்பொழுது படம் நிச்சயமாக கலகலப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை வருகிறது. சமீபத்தில் நல்ல படங்களை ரிலீஸ் செய்து கொண்டிருக்கும் ஹரி உத்ரா புரொடக்‌ஷன்ஸூக்கு வாழ்த்துக்கள்! அஜித் சார், விஜய் சாரை ஆடவைத்த ஸ்ரீதர் மாஸ்டர் இந்த படத்திற்கு நடனம் அமைத்திருப்பது மிகப்பெரிய பலம். இயக்குநர் டெனிஸூம் அடுத்தடுத்து வெவ்வேறு உயரங்களுக்கு செல்வார். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்!".


நடிகர் மகேஸ் சுப்ரமணியன், “இந்த மேடை எனக்கு 15 வருட கனவு. இந்தப் படம் எனக்கு முதல் படம். எனக்கு வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர்கள் அன்பு, வினோத், அரவிந்த் மூன்று பேருக்கும் நன்றி. சீரியலில் நடித்துக் கொண்டிருந்தவனை நம்பி சினிமாவில் வாய்ப்புக் கொடுத்திருந்தார்கள். இந்த சமயத்தில் அன்பு சாரை நான் மிஸ் செய்கிறேன். எனக்கு நிறைய ஊக்கம் கொடுத்திருக்கிறார். உங்கள் ஆசீர்வாதத்தோடு இந்தப் படம் நிச்சயம் வெற்றிப் பெறும். பல போராட்டங்களைத் தாண்டி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. நிச்சயம் மீடியா மற்றும் மக்கள் ஆதரவு தேவை. என்னைப் புதுமுகமாக பார்க்காமல் ஆதரவு கொடுத்த படக்குழுவினர், தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. இயக்குநர் டெனிஸ் இல்லை என்றால் நான் இல்லை. நான் நடிக்க நினைத்த விஷயத்திற்கு எந்தத் தடையும் சொல்லாமல் ஆதரவு கொடுத்தார். படம் நிச்சயம் வெற்றிப் பெறும். சினிமாவில் வரவேண்டும் என ஆசைப்பட்ட விஷயம் இன்று நடந்திருக்கிறது. படமும் சிறப்பாக வந்திருக்கிறது. குடும்பத்தோடு வந்து பார்த்து ஆதரவு கொடுங்கள்”.


இயக்குநர் டெனிஸ் மஞ்சுநாத், “தயாரிப்பாளர் அன்பு மற்றும் நடிகர் மாரிமுத்து எங்கள் படத்தில் ஆரம்பத்தில் இருந்தே பயணித்தார்கள். ஆனால், அவர்கள் இப்போது எங்களோடு இல்லை என்பது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. படத்தை பிப்ரவரி 9 அன்று வெளியிட திட்டமிட்டோம். ஆனால், அதன் பிறகு நிறைய பெரிய படங்கள் இருக்கிறது என்பதால், சீக்கிரமாக எடுத்த முடிவு தான் இந்தப் பட ரிலீஸ். அதனால், படத்தில் உள்ள முக்கிய நடிகர்கள் பலரால் இன்று நிகழ்வுக்கு வரமுடியவில்லை. தயாரிப்பாளர்கள் அன்பு, அரவிந்த், வினோத் மூவரும் இந்தப் படத்திற்காக அவ்வளவு உழைத்துள்ளனர். கிராமம், நகரம் எனப் பல்வேறு லொகேஷனில் இந்தப் படத்தை எடுத்துள்ளோம். எந்தவிதமான வன்முறையும் இல்லாமல் குடும்பத்தோடு ஜாலியாக நீங்கள் படம் பார்க்கலாம். மல்டி ஸ்டார்ஸ் வைத்து படம் எடுப்பது கடினமானது இல்லை என என் படக்குழு எனக்கு சொல்லிக் கொடுத்துள்ளார்கள். படம் நன்றாக வந்துள்ளது. படம் ஜனவரி 25 அன்று வெளியாகிறது. படத்தைப் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்” என்றார்.


மேலும் படிக்க | ‘அயலான்’ படம் பிடிச்சிருக்கா? அப்போ ‘இந்த’ படங்களையும் பாருங்க! கண்டிப்பா பிடிக்கும்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ