நீ ஒன்னும் பிக்பாஸ் இல்ல ! வனிதா-பாலா இடையே வெடிக்கும் சண்டை!
இன்று வெளியாகியுள்ள பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோவில் பாலா-வனிதா இடையேயான சண்டை பிக்பாஸ் வீட்டையே அதிர செய்துள்ளது.
டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ரசிகர்களிடம் நாளுக்கு நாள் அதிக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் ஹைலைட் இரவு 9 மணிக்கு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும். இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் உள்ள நபர்கள் மொத்தமாக 16 பேர் பங்கேற்று இருந்த இந்நிகழ்ச்சியில் தற்போது 2 பேர் வெளியேறி 14 போட்டியாளர்கள் உள்ளனர்.
மேலும் படிக்க | நீங்கள் வெர்ஜினா? ரசிகரின் கேள்விக்கு யாஷிகாவின் வேற லெவல் பதில்!
காதலர் தினத்தை முன்னிட்டு கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் அவரவர்களின் காதல் நினைவுகள் குறித்து ஒவ்வொரு போட்டியாளர்களும் உணர்வுமிக்க வகையில் பகிர்ந்துக்கொண்டு பார்ப்பவர்களின் கண்களை நனைய செய்தனர். அதனை தொடர்ந்து அடுத்த டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது பிக்பாஸ் வீடு 80களில் உள்ள கல்லூரி வாழ்க்கையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
அதற்கேற்றாற் போல் போட்டியாளர்கள் அனைவரும் உடையணிந்து கொண்டு, வீட்டின் செட்டிங்கும் முழுமையாக மாறி 80களில் இருந்தவற்றை கண்முன்னே நிறுத்துகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது, இருப்பினும் இந்த டாஸ்க்கில் சிலர் ஒழுங்காக ஈடுபடவில்லை. மேலும் இந்த டாஸ்க் நடக்கும்பொழுதே வனிதா மற்றும் பாலா இடையே சிறு சிறு வாக்குவாதம் எழுந்தது. அதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் உள்ள டெலிபோனிற்கு அழைப்பு வருகிறது, அந்த அழைப்பை பாலா ஏற்றதும் அதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் யாரும் சரியாக டாஸ்க்கை விளையாடவில்லை அதனால் இந்த வாரம் டபுள் விக்ஷன் இருக்கும் என்று எச்சரிக்கிறார்.
இதனை கேட்ட பாலா போட்டியாளர்களிடம் வந்து நாமே கலந்து பேசி யாராவது இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்பலாம் என பிக்பாஸ் கூறியதாக சொல்கிறார். இதனை கேட்ட மற்ற போட்டியாளராகள் ஒருவருக்கொருவர் வேண்டாத நபர்களை கூறிக்கொண்டிருக்க, திடீரென்று பாலா பிக்பாஸ் அப்படி எதுவும் கூறவில்லை நான் உங்கள் எல்லாரிடமும் பிராங்க் செய்தேன் என்று கூறி அனைவருக்கும் பல்ப் கொடுக்கிறார். இதைக்கேட்ட போட்டியாளர்கள் அதிர்ச்சியடைய வாண்டடாக வம்புக்கு போகும் வனிதா பொங்கி எழுந்து பாலாவிடம் சண்டை போடுகிறார். பாலாவிடம் வனிதா 'நீ ஒன்னும் பிக்பாஸ் இல்ல, என்கிட்ட வந்து கேட்ருக்கலாம்ல, உன் இஷடத்துக்கு நீ பண்ணுவியா' என்று கோவமாக கத்த, பாலாவோ கூலாக பதிலுக்கு பதில் பேசுகிறார். இவ்வாறு ரணகளமாக வெளியாகியுள்ள இந்த இரண்டாவது ப்ரோமோ ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் படிக்க | எல்லாரையும் ஓடவிட வருகிறார் ஜூலி! மீண்டும் பிக் பாஸில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR