மிரர் மைண்ட் ‌புரடக்சன் சார்பில் தினேஷ் பிரசாத் தயாரித்து, எழுதி, இயக்கியுள்ள இப்படத்தில் மாதேவன், ஷாலி நிவகேஷ், ஆஷிகா யாஷ் நடித்துள்ளனர். ஒருவருக்கு திருமணத்திற்கு பிறகு காதல் வராதா ? அப்படி வந்தால் அதை இணையிடம் எப்படி தெரிவிப்பது?, இந்த மையப்புள்ளியில் சுழலும் கதையில், இளைஞர்களின் உறவுச்சிக்கலை பேசும் குறும்படமாக இப்படம் உருவாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பிரமாண்டமாக உருவாகும் 'டபுள் எக்ஸ்எல்' : பாலிவுட்டில் கால் பதிக்கும் நடிகர் மஹத்



புதிய இளம் திறமையாளர்களின் முயற்சியில் சென்னையில் ஒரே நாளில் இக்குறும்படத்தின் முழுப்படப்பிடிப்பையும் முடித்து, அசத்தியுள்ளது படக்குழு. மேலும் தமிழில் புது முயற்சியாக முதன்முறையாக டால்ஃபி அட்மாஸ் சவுண்ட்  சிஸ்டத்தில் இக்குறும்படத்தின் ஒலியமைப்பு செய்யப்பட்டுள்ளது. யூடியூப் தளத்தில் டால்ஃபி அட்மாஸ் வசதி இல்லாத காரணத்தால் 5.1 சவுட்ண்ட் சிஸ்டத்தில் இக்குறும்படம் காணக்கிடைக்கிறது. 



இன்றைய நவீன உலகில் இளைஞர்களின் அடிப்படை பிரச்சனையாக இருக்கும் உறவுச்சிக்கல்களையும் ஒரு விசயத்தை அணுகும் முறையில் உள்ள தயக்கத்தையும், அழுத்தமாக பேசுகிறது இப்படம். சினிமா காலண்டர் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறும்படத்தின் கருவையும், படத்தின் நடிகர்களின் நடிப்பு மற்றும் உருவாக்கத்தை  குறிப்பிட்டு,  ரசிகர்கள் இப்படத்தினை பாராட்டி வருகின்றனர்.  தினேஷ் பிரசாத் எழுதி இயக்க சினிமா காலண்டர் வெளியிட்டுள்ளது.



மேலும் படிக்க | பொன்னியின் செல்வன், காந்தாரா இந்து மதத்துடையது - கங்கனா ரணாவத்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ