யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரைசா மீண்டும் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் சினிமாவில் பல லட்சகணக்கான ரசிகர்களை கொண்டுள்ள இசையமைப்பாளர்களுல் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின், ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான திரைப்படம் ‘பியார் பிரேமா காதல்’. இந்த படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஹரிஷ் கல்யாண், ரைசா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இளன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.


முலுக்க முலுக்க காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம் கடந்த ஆண்டு வெளியாகி இளசுகளின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரைசா முதன்மை வேடத்தில் நடிக்கும் அலைஷ் எனும்  படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் மணி சந்ரு என்ற இயக்குனர் இயக்க உள்ளார். 


இன்நிலையில், அலைஷ் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இது திகில் படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கும் யுவனே இசையமைக்க உள்ளார். நடிகை ரைசா-ன் முதல் படமான ‘பியார் பிரேமா காதல்’ போல் இந்த படமும் வெற்றி பெரும் என எதிா்பார்க்கப்படுகிறது.