தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா, திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கிங் ஆஃப் பிஜிஎம் என அழைக்கப்படும் அவர், திரைப்படங்களுக்கு பேக்கரவுண்ட் இசையமைப்பதில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். 25 ஆண்டுகள் திரைப் பயணத்தையொட்டி, திரைத்துறையினர், ஊடகத்தினர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ள யுவன் சங்கர் ராஜா, இந்த பயணத்தில் உடனிருந்த அனைவராலும் இந்தப் பயணம் சாத்தியமானதாக குறிப்பிட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | "தளபதி 66" அரசியல் சார்ந்த படமா? இயக்குனர் வம்சி விளக்கம்!


மேலும், புதிய சர்பிரைஸ் ஒன்றையும் ரசிகர்களுக்காக தெரிவித்துள்ளார். அதுஎன்னவென்றால், இசையமைப்பாளராக இருந்த யுவன் சங்கர் ராஜா இயக்குநராக அவதாரம் எடுக்க உள்ளார். வழக்கமான ஹீரோ சப்ஜெக்டாக இல்லாமல், ஹீரோயின்களை மையப்படுத்திய கதையை உருவாக்கி வைத்துள்ளாராம். 2022 ஆம் ஆண்டு இறுதி அல்லது 2023 ஆண்டு தொடக்கத்தில் இயக்குநராக அவதாரம் எடுக்க உள்ளார்.



இது குறித்து அவர் பேசும்போது, " நடிப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. ஆனால், படம் இயக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. அதற்காக பெண்ணை மையப்படுத்திய கதை ஒன்றை உருவாக்கி வைத்துள்ளேன். இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு இறுதிக்குள் புதிய படத்துக்கான பணிகள் தொடங்கும். இவ்வளவு நாட்கள் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. திரைத்துறையினர், ஊடக்கத்துறையினர் என அனைவரும் என்மீது காட்டிய அன்புக்கு மிகப்பெரிய நன்றி.



பாடலாசிரியர் நா. முத்துக்குமார் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய் என்னுடைய தீவிர ரசிகர். ஒருமுறை யுவனிசம் டீ சர்ட் அணிந்து ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார். அந்த மெசேஜ் இவருக்கும் இடையிலான தனிப்பட்ட விஷயம் என்பதால் பொதுவெளியில் பகிரவில்லை" எனத் தெரிவித்தார். 1997 ஆம் ஆண்டு சரத்குமார் - பார்த்திபன் ஆகியோர் நடித்த அரவிந்தன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் யுவன் சங்கர் ராஜா. இதுவரை சுமார் 150க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். 


மேலும் படிக்க | மலையாள பட ரீமேக்கில் சிம்பு-எஸ்.ஜே.சூர்யா கூட்டணி?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR