மலையாள பட ரீமேக்கில் சிம்பு-எஸ்.ஜே.சூர்யா கூட்டணி?

'மாநாடு' படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஒரு புதிய படத்தில் சிம்பு - எஸ்.ஜே.சூர்யா கூட்டணி இணையப்போவதாக தகவல்கள் பரவி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Jan 30, 2022, 10:29 AM IST
  • 'மாநாடு' படத்தில் சிம்புவை விட வில்லனாக நடித்து அசத்திய எஸ்.ஜே.சூர்யாவிற்கு அதிக வரவேற்பு கிடைத்தது.
  • டிரைவிங் லைசென்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிக்க உள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.
மலையாள பட ரீமேக்கில் சிம்பு-எஸ்.ஜே.சூர்யா கூட்டணி? title=

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'மாநாடு' (Maanaadu)படம் சிம்புவின் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்றது.  இப்படத்தில் கதாநாயகனாக நடித்த சிம்புவை விட வில்லனாக நடித்து அசத்திய எஸ்.ஜே.சூர்யாவிற்கு அதிக வரவேற்பு கிடைத்தது.  இந்த திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி அமரன், அன்ஜனா கீர்த்தி, மனோஜ் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், டேனியல் ஆன்னி போப் ஆகியோர் நடித்திருந்தனர்.

ALSO READ | பிப்ரவரி 3-ல் சிம்பு ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்பிரைஸ்..! அதே அப்டேட் தான்..!

நீண்ட இடைவெளிக்கு பின்னர் சிம்பு இப்படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் தனது பெயரை நிலைநாட்டினார்.  பல பிரச்சனைகளை தாண்டி வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும்  ஹிட் ஆனது.  இப்படத்தில் சிம்பு நடிப்பை பாராட்டுவதா இல்லை எஸ்.ஜே.சூர்யா (SJ Surya) நடிப்பை பாராட்டுவதா என்று ரசிகர்கள் குழப்பமடையும் அளவிற்கு இவர்களது நடிப்பு இருந்தது.

இந்நிலையில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இந்த வெற்றி தற்போது மீண்டும் இணையப்போவதாக தகவல்கள் வெளிவந்து இருக்கிறது.  கடந்த 2019ம் ஆண்டி பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியான டிரைவிங் லைசென்ஸ் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.  இதில் சுராஜ் வெஞ்சாரமூடு, மியா ஜார்ஜ், தீப்தி சதி, சைஜு குருப், சுரேஷ் கிருஷ்ணா, லாலு அலெக்ஸ், மேஜர் ரவி, நந்து ஆகியோர் நடித்திருந்தனர்.  இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்க உள்ளதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகிறது, இருப்பினும் இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை.

drivinglicence

இப்படத்தின் தமிழ் ரீமேக்கை 'வாலு' படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான விஜய் சந்தர் இயக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.  இப்படத்திற்காக சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இருப்பினும் இவர்களது கூட்டணியில் மீண்டும் ஒரு சூப்பர்ஹிட் படம் அமைந்தால் அது இவர்களை மென்மேலும் புகழ் வெளிச்சத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.  இயக்குனர் விஜய் சந்தர் விக்ரமை வைத்து 'ஸ்கெட்ச்' படத்தையும், விஜய் சேதுபதியை வைத்து 'சங்கத்தமிழன்' படத்தையும் இயக்கியுள்ளார்.

ALSO READ | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News