பஞ்சாயத்தில் பட்டய கிளப்பிய பரணி.. சௌந்தரபாண்டிக்கு வந்த ஆப்பு - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
Anna Serial Today Update : அண்ணா சீரியலில், பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் பாக்கியம் பரணியை தனியாக சந்தித்து ஒரு கவரை கொடுக்க பிறகு பரணி பஞ்சாயத்துக்கு வந்து அவர் சொன்னா மாதிரி எங்க வீட்டை அவரே எடுத்துக்கட்டும் என சொல்வதால் அடுத்த பரபரப்பு ஏற்படுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி சண்முகம் வீட்டுக்கு பூட்டு போட பதிலுக்கு பரணி சௌந்தரபாண்டி வீட்டுக்கு பூட்டு போட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது சண்முகத்தின் குடும்பத்தினர் வீட்டுக்குள் செல்ல முடியாமல் வெளியில் தங்கி இருக்க சண்முகம் எல்லோருக்கும் சாப்பாடு வாங்கி வந்து கொடுக்க பக்கத்து வீட்டு பெண்மணி சாப்பாடு இல்லாமல் கூட இருந்திடலாம் தண்ணி இல்லாம எப்படி இருக்க முடியும் என்று ஒரு குடம் தண்ணீரைக் கொண்டு வந்து கொடுக்கிறார். இப்படி அக்கம் பக்கத்தினர் எல்லோரும் சண்முகத்தின் குடும்பத்தை கவனித்துக் கொள்கின்றனர்.
அதேபோல் மறுபக்கம் சௌந்தரபாண்டி குடும்பத்தினர் கோவிலில் தங்கி இருக்க சௌந்தரபாண்டி அரண்மனை மாதிரி இருந்த வீட்ல வாழ்ந்த என்னை இப்படி வெளியில தங்க வச்சுட்டாங்களே இன்றைய புலம்புகிறார். இந்த சமயத்தில் பாக்கியம், இசக்கி மற்றும் சிவபாலன் என மூன்று பேரும் கோவிலில் உட்கார்ந்து தாயம் விளையாடிக் கொண்டிருக்க அதைப் பார்த்து சௌந்தரபாண்டி இன்னும் கடுப்பாகிறார்.
மேலும் படிக்க | வெற்றி நடித்துள்ள பகலறியான் படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!
பிறகு ஏஜிஎஸ்க்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸில் தங்கலாம் என்று முடிவு எடுக்க பாக்கியம் என் பொண்ணு வீடு இல்லாம வெளியே கிடக்கின்றது நான் எப்படி வர முடியும் வரமாட்டேன் என்று சொல்லி சௌந்தரபாண்டியை வெறுப்பேற்றுகிறாள்.
மறுநாள் பஞ்சாயத்து கூட சௌந்தரபாண்டி சண்முகம் என்கிட்ட தான் பணத்த கடனை வாங்கி இருக்கேன் அதுக்கான பத்திரம் என்கிட்ட இருக்கு என்று சொல்லி காட்ட சண்முகம் நான் அண்ணாச்சி கிட்ட தான் கடன் வாங்கி இருந்தேன் என்று சொல்ல சௌந்தரபாண்டி கொடுத்த பத்திரத்தில் சௌந்தரபாண்டியுடன் கடனாக வாங்குகிறேன் என்று தான் எழுதி இருக்கிறது. இது தெரியாமல் சண்முகம் கையெழுத்து போட்டது தெரிய வருகிறது.
அடுத்து பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் பாக்கியம் பரணியை தனியாக சந்தித்து ஒரு கவரை கொடுக்க பிறகு பரணி பஞ்சாயத்துக்கு வந்து அவர் சொன்னா மாதிரி எங்க வீட்டை அவரே எடுத்துக்கட்டும். எனக்கு ஒரு வீடு இருக்கு.. அந்த வீட்டுக்கு நான் உங்கள கூட்டிட்டு போறேன் அதை இவரால தடுக்க முடியாது என்று சொன்னதும் சௌந்தரபாண்டி உனக்கு என்ன வீடு இருக்கு என்று கேள்வி கேட்க நீங்க இருக்கிறீங்களே அதுவே என்னுடைய வீடு தான்.. என் பெயர்ல தான் இருக்கு என்று அதிர்ச்சி கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ