OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பரான புதுப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

OTT Releases This Week :  அனைத்து வாரங்களை போல, இந்த வாரமும் ஓடிடியில் பல புதிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம். 

 

OTT Releases This Week : இந்தியாவில், ஓடிடி தளங்கள் பெருகியதன் காரணமாக பல்வேறு படங்கள் தியேட்டரில் கூட திரையிடப்படாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகி வருகின்றன. அது மட்டுமன்றி, திரையரங்குகளில் வெளியாகும் படங்களும் கூட, குறிப்பிட்ட சில நாட்களுக்கு பிறகு ஓடிடி தளங்களில் வெளியிடப்படுகின்றன. தியேட்டரில் படத்தை பார்க்க தவறியவர்கள், ஓடிடி தளங்களால் பயனடைந்து கொள்கின்றனர். அனைத்து வாரங்களை போலவே, இந்த வாரமும் பல்வேறு திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக இருக்கின்றன. அவை என்னென்ன என்பதையும், அவற்றை எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம் என்பதையும் இங்கு பார்ப்போம். அனைத்து வாரங்களை போல, இந்த வாரமும் ஓடிடியில் பல புதிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம். 

 

1 /8

வைட்ரோஸ்-டெண்ட்கொட்டா ராஜசேகர் இயக்கத்தில் உருவான படம், வைட் ரோஸ். இதில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தை, டெண்ட்கொட்டா தளத்தில் தமிழில் காணலாம். 

2 /8

வல்லவன் வகுத்ததடா-ஆஹா பணத்தேவை இருக்கும் 5 முக்கிய கதாப்பாத்திரங்களின் கைகளில் திடீரென்று பணம் கிடைத்தால் எப்படியிருக்கும் என்பதுதான் இப்படத்தின் கதை. இந்த திரைப்படத்தை ஆஹா ஓடிடி தளத்தில் காணலாம். 

3 /8

அண்டர் தி ப்ரிட்ஜ்: ஹாட்ஸ்டார் ஆங்கிலத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம், Under The Bridge. இப்படம், டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியிருக்கிறது. 

4 /8

Seven Orifices - Netflix: ஜப்பானிய மொழியில் உருவாகியிருக்கும் தொடர், செவன் ஓரிஃபிஸஸ். இந்த தொடரை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம்.   

5 /8

ரத்னம் - ப்ரைம்: விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், ரத்னம். இந்த படத்தை ஹரி இயக்கியிருந்தார். இப்படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் காணலாம். 

6 /8

மைதான் - ப்ரைம்: அஜய் தேவ்கன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம், மைதான். இந்த படம், அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியிருக்கிறது. 

7 /8

தி கார்டாஷியன்ஸ்: ஆங்கிலத்தில் மிகவும் பிரபலமான ரியல் லைஃப் டாக்குமெண்டரி தொடர், தி கார்டாஷியன்ஸ். இந்த தொடரின் 5ஆம் பாகம் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியிருக்கிறது. 

8 /8

க்ரூ : தபு, கரீனா கபூர், க்ரித்தி சனோன் உள்ளிட்டோரின் நடிப்பில் இந்தியில் உருவாகியிருக்கும் படம், Crew. இந்த படம், நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கிறது.