அழகிய தமிழ் மகள் தொடர் ஜீ தமிழில் தொடங்கியது!

அழகிய தமிழ் மகள் தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நேற்று முதல் (28-ம் தேதி) தொடங்கியது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது.
ஒரு மலை கிராமத்தில் வாழும் பெண்ணுக்கு கபடி விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்பதே லட்சியம். இந்த லட்சிய பயணத்தை மையமாக கொண்டு இந்த சீரியல் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரை சீரியல் வரலாற்றில் ஒரு விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வரும் சீரியல் தான் "அழகிய தமிழ் மகள்".
இந்நிலையில் இந்த தொடர் நேற்று முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது.