Zee Tamil Channel New Serial Veera Streaming Time: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி முன்னணி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் தனித்துவமான வரவேற்பு கிடைத்து வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் காரணமான டிவி சேனலும் தொடர்ச்சியாக புதுப்புது சீரியல்களை களமிறக்கி வருகிறது, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நினைத்தேன் வந்தாய் என்ற புத்தம் புதிய சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியது. இதனை தொடர்ந்து வரும் பிப்ரவரி 26-ம் தேதி முதல் வீரா என்ற பெயரில் புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாக உள்ளது. 


அண்ணனுக்கு அண்ணனாக அப்பாவுக்கு அப்பாவாக குடும்பத்தை தாங்கிய அண்ணன் விபத்தில் உயிரிழக்க அண்ணன் இடத்தை நிரப்பி குடும்ப பாரத்தை சும்மா வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறாள் வீரா. இதனால் இனி அவளுடைய வாழ்க்கையில் நடக்க போவது என்ன? வீராவுக்கு தங்கையே வில்லியானது எப்படி? பாசத்திற்கும் புகைக்கும் இடையேயான இந்த போராட்டத்தில் வீரா வெல்ல போவது எப்படி? என்பது தான் இந்த சீரியலின் கதைக்களமாக அமைய உள்ளது. 


மேலும் படிக்க | இப்படி குடிச்சிட்டு வந்து மானத்தை வாங்குறானே? ஷண்முகத்தால் வருத்தப்படும் குடும்பத்தினர்


வரும் திங்கள் ( பிப்ரவரி 26 ) முதல் இந்த சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இதன் காரணமாக மாரி சீரியலின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது வரும் திங்கள் முதல் மாரி சீரியல் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதன் காரணமாக இதுவரை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நளதமயந்தி சீரியல் இனி இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வித்யா நம்பர் 1 சீரியல் இந்த வாரத்துடன் முடிவுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடதக்கது. புதிய நேரத்தில் ஜீ தமிழ் சீரியல்களை காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க | கார்த்திகை தீபம்: கார்த்திக்கு கிடைத்த பாராட்டு, புலம்பி தவிக்கும் அபிராமி..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ