ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 3 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பேரன்பு. இந்த சீரியல் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வந்த நிலையில் இந்த வாரம் கிளைமாக்ஸ் ஒளிபரப்பாக உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படியான நிலையில் கிளைமாக்ஸ் வாரத்தில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது கார்த்திக், ஷன்மதி விவாகரத்துக்கு விண்ணப்பித்திருக்கும் நிலையில் ஷண்மதியின் ஆசைப்படி வெளிநாட்டில் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் இப்போதிருக்கும் சூழ்நிலையில் 6 மாதத்துக்கு எதுவும் செய்ய முடியாது என்று சொல்ல கார்த்திக் இதை கேட்டு விடுகிறான், இதுவரை இவளது மனது மாறாத நிலையில் உடனடியாக ஷண்மதிக்கு விவாகரத்துக்கு கொடுத்து அவளை படிக்க வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்க முடிவெடுக்கிறான். 


மேலும் படிக்க | தமயந்தி தான் ஓனர் என்ற உண்மை தெரிய வந்தது! குடும்பமா? மெஸ்ஸா? நளதமயந்தி சீரியல்


நீதிபதியிடம் பேசி விவகாரத்தையும் வாங்கி விட இறுதியில் நீதிமதி கார்த்தி தன்னை சந்தித்து பேசிய விஷயத்தை சொல்ல ஷண்மதி அவனின் காதலை புரிந்து கொள்கிறாள், இருந்தாலும் வீட்டில் இருந்து கிளம்பும் போது ராஜேஸ்வரி அவள் வெளிநாட்டில் படிக்க தேவையான ஏற்பாடுகள் செய்து வைத்திருப்பதை சொல்லி அவளை வீட்டிற்கு அழைத்து சென்று விட கிளம்புகிறாள். 


ஷண்மதி, வானதி இருவரும் காரில் சென்று கொண்டிருக்கும் போது mp மனைவி ஷண்மதியை கொல்ல வர ராஜேஸ்வரி கத்தி குத்து வாங்கி உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? கார்த்திக், ஷன்மதி வாழ்க்கையில் ஒன்று சேர போவது எப்படி என்ற காட்சிகளுடன் சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. எனவே பேரன்பு கிளைமாக்ஸை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: மகாலட்சுமியை புலம்ப விட்ட சீதா.. ராமின் தங்கைகளுக்கு காத்திருந்த ஷாக்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ