சீதா ராமன் அப்டேட்: மகாலட்சுமியை புலம்ப விட்ட சீதா.. ராமின் தங்கைகளுக்கு காத்திருந்த ஷாக்

Seetha Raman Today's Episode Update:  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 8, 2023, 02:11 PM IST
  • சீதா ராமன் : இன்றைய எபிசோட்.
  • மகாவுக்கு ஷாக்.
  • ராமின் தங்கைகளை மிரட்டும் சீதா.
சீதா ராமன் அப்டேட்: மகாலட்சுமியை புலம்ப விட்ட சீதா.. ராமின் தங்கைகளுக்கு காத்திருந்த ஷாக் title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சீதா மூன்று பெண்களையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, மகாலட்சுமி மூன்று பெண்களின் தன்னை விட்டு சென்று விடுவார்களோ என நினைத்து புலம்பி தவிக்கிறாள். தூங்கிக் கொண்டிருக்கும் பெண்களை எழுப்பி என்னை விட்டு போக மாட்டீங்க தானே என்று கேட்க அவர்கள் உங்களை விட்டு போக மாட்டேன் சித்தி நீங்க தான் எங்களுக்கு முக்கியம் என எமோஷனலாக பேசுகின்றனர். 

மகாவுக்கு ஷாக்

இப்படியான நிலையில் மறுநாள் காலையில் சீதா பூஜை செய்யும் சத்தம் கேட்டு மகாலட்சுமி அர்ச்சனா ஆகியோர் எழுந்து கீழே மூன்று பெண்களும் சீதா உடன் சேர்ந்து பூஜை செய்து கொண்டிருப்பதை பார்த்து ஷாக்காகின்றனர். 

மேலும் படிக்க | தென்னிந்தியாவின் பணக்கார நடிகர் யார் தெரியுமா? அதுவும் இத்தனை கோடி சொத்தா?

அதைத் தொடர்ந்து மகா அர்ச்சனா தங்களது பக்கம் இருக்க முயற்சி செய்கின்றனர். இதற்கிடையில் அர்ச்சனா நீ ஐபிஎஸ் பாண்டியன் போனால் தான் இருக்கு என்றெல்லாம் வாய் தவறி உளறி விடுகிறாள். 

ராமின் தங்கைகளை மிரட்டும் சீதா

இறுதியாக சீதா அடுத்ததாக சமையல் தான் என்று மூன்று பெண்களையும் கூப்பிட அவர்கள் வர மறுக்க சாட்டை எடுத்து சுழற்றி பயமுறுத்த மகாலட்சுமி ரூமுக்கு ஓடிச்சென்று சீதா தங்களை மிரட்டுவதாக சொல்கின்றனர்.

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | எனக்கு இவரை பார்த்தால் பொறாமையாக உள்ளது: சூர்யா பேச்சு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News