அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் உமா மாயாவிடம் நீ யார் என்று மிரட்டி கேட்க அவள் தாலியை எடுத்து காட்டிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: விஷாலுடன் மணமேடை ஏறிய மீரா.. சீதாவுக்கு ஷாக்!


அதாவது, மாயா உமாவிடம் தாலி செயினை எடுத்து காட்டி செந்தில் என் கழுத்துல கட்டுன தாலி என சொல்ல உமா ஷாக்காகிறாள். மாயா இதுக்கு சாட்சியா எங்களுக்கு பிறந்த குழந்தையும் இருக்கு என சொல்ல உமா மனதிற்குள் இந்த ஒரு விஷயம் எனக்கு போதும் அமுதா உன் குடும்பத்தை காலி பண்றதுக்கு என எண்ணுகிறாள். பிறகு உமா மாயாவிடம் ஊர் பஞ்சாயத்தை கூட்டி உனக்கான நியாயத்தை எடுத்து சொல்லு என ஏத்தி விடுகிறாள். 


அடுத்ததாக அன்னலட்சுமி அமுதாவிடம் குலதெய்வ கோயிலுக்கு போயி பொங்க வைக்கனும் என சொல்லிக் கொண்டிருக்க, வெளியில் தண்டோரா போட்டு ஒருவர் மாயா கதிரேசன் வாத்தியார் குடும்பத்துல மேல பஞ்சாயத்து பிராது குடுத்துருக்கா என சொல்லிவிட்டு செல்ல அமுதா உட்பட அனைவரும் குழப்பம் அடைகின்றனர். 


பிறகு பஞ்சாயத்து கூட மாயா குழந்தையுடன் வர செந்தில் அவளை பார்த்ததும் ஷாக்காகி இவளா மாயாவா என அமுதாவிடம் கேக்க, அமுதா தலையாட்ட, இவ மாயா இல்ல பிரியா என சொல்கிறான்.செந்தில் மாயாவிடம் என் மேல எதுக்கு பிராது குடுத்த என கேக்க, எனக்கும் என் கையில இருக்குற குழந்தைக்கும் ஒரு பதில் வேணும் , இவர் தான் என் புருஷன் என சொல்லி தாலியை  காட்ட அனைவரும் ஷாக்காக செந்தில் பஞ்சாயத்தாரிடம் இவ சொல்றது எல்லாமே பொய் என வாதிடுகிறான். 


மாயா பஞ்சாயத்தாரிடம் நானும் செந்திலும் பி.எட் ஒண்ணா படிச்சோம் என்று சொல்ல செந்திலும் நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா படிச்சது உண்மை தான், ஆனா நான் எதுவும் தப்பு பண்ணலை என சொல்ல மாயா படிக்கும் போது இவருடைய பேரை தவிர வேற எதுவும் தெரியாது, என்னை ஏமாத்திட்டு ஓடி வந்துட்டாரு, நான் இவரை தேடி தான் இங்க வந்தேன், அதனால என் பேரை மாத்திகிட்டு இங்க வந்தேன், நான் என் புருஷன் உயிரை காப்பாத்த, என் மாமியார் வீட்டை காப்பாத்துறதுக்காக 20 லட்சம் பணம் குடுத்தேன் என் ஆணித்தரமாக சொல்கிறாள். 


செந்தில் பழனி தான் இதுக்கு காரணம் என சொல்லி பழனியை அடிக்க போக கைகலப்பு ஏற்பட பழனி செந்தில் தான் தப்பு பண்ணிட்டு ஏமாத்துறான் என சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது


அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.


மேலும் படிக்க | பூஜாவுக்கு விடுதலை! சாட்சி வீடியோ பிராங்க் என நீதிமன்றம் தீர்ப்பு! மீனாட்சி பொண்ணுங்க நிம்மதி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ