Sandhya Raagam: தமிழ் சின்னத் திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியாராகம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தனம் இறுதி கட்டப் போட்டியில் பங்கேற்ற நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது நடந்து முடியும் போட்டியில் தனம் வெற்றி வாகை சூட அதைப்பார்த்து கார்த்திக் மற்றும் ஜானகி என இருவரும் சந்தோஷப்படுகின்றனர். உடனே ஜானகி சரி வா கிளம்பலாம் நமக்கு டைம் இல்ல என்று சொல்லி தனத்தை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்புகிறாள். 


மறுபக்கம் சாருக்கு முதலில் சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. ரூமில் சீனு மற்றும் மாயா என இருவரும் ஜானகி மற்றும் தனத்தை காணாமல் உச்சகட்ட டென்ஷனில் இருக்கின்றனர். 


சாருக்கு சடங்கு நடந்து முடிந்ததும் மாயாவை கூப்பிடுகின்றனர். இதுதான் சரியான சந்தர்ப்பம் என சாருவின் அப்பா மாயா இங்க இருந்தா தானே வருவா, அவ காலையிலேயே வீட்டை விட்டு வெளியே போயிட்டா என்று சொல்ல ரகுராம் மாயா மாயா என மூன்று முறை கூப்பிட ரூமுக்குள் இருந்து மாயா வெளியே வருவதை பார்த்து சாருவின் குடும்பம் மொத்தமும் அதிர்ச்சி அடைகிறது. 


மேலும் படிக்க | உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் விஜய் ஆண்டனி பட நடிகை! என்ன ஆச்சு?



உடனே சாரு தன்னுடைய அப்பாவை கூப்பிட்டு மாயாவோட துணியை போட்டுக்கிட்டு யாரோ ஒரு பொண்ணு வெளியே போறத நான் பார்த்தேன் அது ஏன் தனமா இருக்கக்கூடாது என்று சொல்ல சாருவின் அப்பா சாரி வீட்டை விட்டு வெளியே போனது மாயா இல்ல தனம் தான் என்று சொல்ல ரகுராம் டென்ஷன் ஆகிறார். 


யாரைப் பத்தி என்ன பேசுறீங்க என்று கோபப்பட ஆமா காலையிலிருந்து ஜானகியையும் தனத்தையும் காணோம் அவங்க ரெண்டு பேரும் எங்க போனாங்க என்று கேள்வி எழுப்ப ஜானகி தனத்துடன் பின்பக்க வாசல் வழியாக வீட்டுக்குள் நுழைந்து வந்து விடுகிறார். 


ஜானகி மற்றும் தனத்தை பார்த்த ரகுராம் குடும்பம் சந்தோஷப்பட மீண்டும் பல்பு வாங்குகின்றனர் ஷாருவின் குடும்பம். அடுத்ததாக சீனுவை கூப்பிட்டு முறைமாமன் சடங்கு செய்ய சொல்கின்றனர். ஐயர் முதலில் மாயாவுக்கு தான் செய்ய வேண்டும் என்று சொல்ல சாருவின் அப்பா இல்லை சாருவுக்கு தான் செய்யணும், இனி எங்கே என் எதையும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று சொல்ல ரகுராம் ஐயர் சொன்னபடி தான் செய்ய வேண்டும் என பதிலடி கொடுக்க இருவருக்கும் வாக்குவாதம் உருவாகிறது. 


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


சந்தியா ராகம் சீரியலை எங்கு பார்ப்பது?


சந்தியா ராகம் சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | Manjummel Boys: 100 கோடி வசூலை தாண்டிய மஞ்சுமெல் பாய்ஸ்! தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ