Zee Tamil: தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சேனலும் தொடர்ந்து புதுப்புது சீரியல்களையும் ரியாலிட்டி ஷோக்களையும் கொண்டு வரும் நிலையில் அடுத்து குழந்தைகளுக்கான 'சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4' நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக உள்ளது. அதுமட்டுமின்றி மகாநடிகை என்ற புதிய நிகழ்ச்சியும் ஒளிபரப்பாக உள்ளது. 


நாயகியாக வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் பெண்களின் கனவை நனவாக்கும் மேடையாக இந்த நிகழ்ச்சி அமைய உள்ளது. இதற்கான ஆடிஷன் திருவண்ணாமலையில் தொடங்கிய நிலையில் தமிழகம் முழுவதும் தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் மகாநடிகை ஆடிஷன்ஸ் சேலத்திலும் சரிகம லிட்டில் சேம்ஸ் சீசன் 4 ஆடிஷன்ஸ் சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் நடை பெரும் நாள் மற்றும் இடம் குறித்த விபரங்கள் பின்வருமாறு: 


மகாநடிகை ஆடிசன்ஸ் :


இடம்: சேலம் 
நாள்: 22.08.2024 வியாழன் கிழமை 
நடைபெறும் இடம்: ஆராதனா இசைப்பள்ளி, 10/315, காளியாபிள்ளை தோப்பு, இரண்டாவது குறுக்குத் தெரு, எஸ். கே. எஸ், ஆஸ்பிடல் ரோடு, பேர்லண்ட்ஸ், சேலம். 


இந்த ஆடிஷனில் 18 முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் நடுவர்களாக பங்கேற்க உள்ளனர். தேர்வாகும் போட்டியாளர்களுக்கு நடிப்பு திறமையை வெளிக்காட்டும் வகையில் வித்தியாசமான பல ரவுண்டிகளின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


சரிகமபா லிட்டில் சேம்ஸ் சீசன் 4 ஆடிசன்ஸ்:


• கிருஷ்ணகிரி.
நாள்: 20.08.2024, செவ்வாய் கிழமை
நடைபெறும் இடம்: தேன் தமிழ் நாட்டியாலயா,No. 1/149, முதல் தளம், ஹைடெர் Complex , ராயக்கோட்டை ரோடு, கிருஷ்ணகிரி.


• தருமபுரி, 
நாள்: 21.08.2024 புதன் கிழமை 
நடைபெறும் இடம்: ஸ்ரீ லட்சுமி சிவசக்தி டான்ஸ் அகாடமி சேலம் நெடுஞ்சாலை, நேதாஜி பைபாஸ் சாலை, அரசு மருத்துவமனை அருகில், இரயில் நிலையம் சாலை, அலெக்ஸ் ஆர்தோ கேர் 2வது மாடி, தருமபுரி, 


• சேலம். 
நாள்: 22.08.2024 வியாழன் கிழமை 
நடைபெறும் இடம்: ஆராதனா இசைப்பள்ளி, 10/315, காளியாபிள்ளை தோப்பு, இரண்டாவது குறுக்குத் தெரு, எஸ். கே. எஸ், ஆஸ்பிடல் ரோடு, பேர்லண்ட்ஸ், சேலம். 


இந்த சீசனுக்கான ஆடிஷனில் 6 முதல் பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள் கலந்துகொள்ளலாம் என ஜீ தமிழ் தொலைக்காட்ச்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சாமானியனையும் சாதனையாளராக மாற்றும் இந்த பொன்னான வாய்ப்பை ஆர்வமும், திறமையும் உள்ளவர்கள் பயன்படுத்திக்கொண்டு முன்னேறும் நோக்கில் ஜீ தமிழ் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!


மேலும் படிக்க | எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தும் தங்கலான் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?


மேலும் படிக்க | டாப் ஹீரோக்களுக்கு டப் கொடுக்கும் சூரி! அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ