அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் நேற்று செந்தில் போட்ட கணக்கை அமுதா தீர்த்து வைத்து ஷாக் கொடுத்த நிலையில் கதிரேசன் சொல்லிக் கொடுக்க அமுதா படிப்பதை பார்த்து அன்னம் அமுதா பைத்தியம் ஆகிவிட்டதாக சொல்ல செந்தில் வருத்தப்பட்டான். 


மேலும் படிக்க | தாலியுடன் ஷாக் கொடுத்த பரணி! அண்ணா சீரியலில் சௌந்தர பாண்டி வைத்த செக்மேட்


இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் பரமுவிடம் வடிவேல் அமுதாவுக்கு அப்பா பாடம் சொல்லி தராருன்னு சொல்லிட்டு இருக்கா அது உண்மையான்னு தெரியல அவளை எதாவது பண்ணனும் என்று சொல்ல, மனைவி சுமதி என்ன பண்ண போற என்று கேட்க வடிவேல் ஒரு திட்டம் போடுகிறான்.


அமுதா முகம் கழுவும் தண்ணீரில் வடிவேல் எதோ ஒன்றை கலக்கிறான், வடிவேல் அமுதா இந்த தண்ணியில முகம் கழுவும்போது இதுல இருக்கும் chemical பட்டு அமுதாவுக்கு கண் பார்வை போகும் என்று நினைக்கிறான். 


அதே போல் அமுதா முகம் கழுவ போவது build ups எகிற அப்போது அமுதா உடம்பில் கதிரேசன் ஆவி வருகிறது‌. வடிவேலை அடித்து கழுத்தை நெறிக்க அவன் கத்தும் சத்தம் கேட்டு அனைவரும் அங்கே ஓடி வருகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது


அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.


மேலும் படிக்க | Maamannan Fans Review: மாமன்னனால் மக்களின் மனநிலை மாறும்... இது ரசிகர்களின் விமர்சனம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ