ஜூன் 9-ம் தேதி வெளியாகிறது ‘சத்ரியன்’
தற்போது ஜூன் 9-ம் தேதி 'சத்ரியன்' வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் விக்ரம் பிரபுவுடன் கைகோர்த்திருக்கும் படம் ‘சத்ரியன்’. நாயகியாக மஞ்சிமா மோகன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் பேனரில் டி.ஜி.தியாகராஜன் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் பாடல்களின் ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. தற்போது ‘சத்ரியன்’ படம் வரும் ஜூன் மாதம் 9-ம் தேதி திரைக்கு வர இருப்பதாக டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இதற்கு முன்பு இப்படத்திற்கு "முடிசூடா மன்னன்" என்று தலைப்பும் உறுதிசெய்யப்பட்ட இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.