நரோடா பாட்டியா வன்முறை வழக்கில் குஜராத் முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானிக்கு விதிக்கப்பட்ட 28 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்திற்கு அடுத்த நாள், 2002-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி நரோடா பாட்டியா என்ற இடத்தில் மிகப் பெரிய வன்முறை வெடித்தது. இதில் 97 சிறுபான்மையினர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மாயா கோட்னானி, முன்னாள் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பாபு பஜ்ரங்கி உள்பட 70 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.


வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோட்னானி, பஜ்ரங்கி உட்பட 32 பேர் குற்ற வாளிகள் என தீர்ப்பளித்தது. இதில் கோட்னானிக்கு 28 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளிக்கப்பட்டது. 


பாபு பஜ்ரங்கி உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் சார்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஹர்ஷ் தேவானி தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்தது.


28 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மாயா கோட்டானி மற்றும் அவரது உதவியாளர் உள்ளிட்ட 15 பேரை வழக்கில் இருந்து விடுவித்தது. சிறப்பு நீதிமன்றம் வழங்கி 28 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து செய்யப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர். அதேசமயம் விஸ்வ இந்து பரிஷத் மூத்த தலைவர் பாபு பஜ்ரங்கிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.


இது குறித்து அரசு தரப்பு வக்கீல் பிரசாந்த் தேசாய் கூறும் போது, இந்த வழக்கில் சாட்சியங்களாக அழைக்கப்பட்ட 11 பேரும் விதவிதமான தகவல்களை தந்தனர். மேலும் அவர்களுக்கு மாயா கோட்டானி சம்பவத்தின் போது அங்கு இருந்தார் என்பது குறித்து யாருக்கும் தெளிவு இல்லை என்று கூறினார். 


மேலும், குஜராத் கலவரத்தின் போது தான் அகமதாபாத் அருகே இருக்கும் சோலோ சிவில் மருத்துவமனையில் இருந்ததாக மாயா கோட்டானி கோர்ட்டில் தெரிவித்துள்ளார். இதனால் அவர் மீது சாட்டப்பட்ட குற்றத்திற்கு சரியான ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.