மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான NEET நுழைவுத்தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) நடத்தும் இத்தேர்வினில் களந்துக்கொள்ள நாடு முழுவதும் சுமார் 13,26,725 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1,7,288 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். 


நாடு முழுவதும் 2,255 மையங்களில் இத்தேர்வு இன்று நடைபெறுகிறது. அதில் தமிழகத்தில் மட்டும் 170 மையங்கள் இடம்பெற்றுள்ளது. இதை தொடர்ந்து, நீட் தேர்வு எழுத பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மாணவர்களை உடலளவிலும் மன அளவிலும் சோர்வடைய வைத்துள்ளனர். 


இந்த தேர்வு இன்று காலை 10 மணிக்கு துவங்கியது. இந்நிலையில், நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்துச் சென்ற தந்தை கிருஷ்ணசாமி எர்ணாகுளத்தில் மாரடைப்பால் மரணம். தந்தை இறந்தது தெரியாமல் மகன் கஸ்தூரி மகாலிங்கம் எர்ணாகுளத்தில் நீட் தேர்வை எழுதி வருகிறார்.  விடுதியில் தங்கியிருந்த போது திருத்துறைப்பூண்டி விளக்குடியை சேர்ந்த கிருஷ்ணசாமி மாரடைப்பால் மரணமைந்தார். இதை தொடர்ந்து அவரின் உடலை  சொந்த ஊருக்கு கொண்டுவர தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. 


இந்த சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் குறிப்பிட்டுள்ளது....! ஆண்டுதோறும் நரபலி கேட்கும் நீட் தேர்வை நிறுத்த வேண்டும். நீட் கொடுமையால் மருத்துவம் படிக்க முடியாமல்போன மாணவி அனிதா உயிரை சென்ற ஆண்டு பறிகொடுத்தோம். இதை தொடர்ந்து, தற்போது மகனுக்கு துணையாகச் சென்ற தந்தை கிருஷ்ணசாமியை மன உளைச்சலால் இந்த ஆண்டு பறிகொடுத்துள்ளோம். 


நீட் தேர்வால் மாணவர்கள் மட்டுமின்றி அவர்களின் பெற்றோரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை  கிருஷ்ணசாமி மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.