நீட் தமிழ் வினாத்தாளில் 49 பிழைகள் கண்டுபிடிப்பு!!
மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கான தமிழ் வினாத்தாளில் 49 மொழி பெயர்ப்புப் பிழைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!
மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு கடந்த மே-7 ம் தேதி நடைபெற்றது. இதில், வேறு மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டது உள்ளிட்ட பல காரணங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தது. இதில் தமிழகத்தில் இருந்து 24 ஆயிரம் மாணவ, மாணவிகள் தமிழில் நீட் தேர்வெழுதினர்.
இந்நிலையில், தன்னார்வ தொண்டு நிறுவனம் நீட் தேர்வில் பிழைகள் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது..!
இது குறித்து அந்நிறுவனம், நீட் தேர்வுக்கான 180 வினாக்கள் கொண்ட தமிழ் வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.
உதாரணமாக, அந்த வாரியம் இரண்டு கேள்விகளின் பிழைகளை இது குறித்து எடுத்துக்காட்டியுள்ளது.
வினாத்தாளில் 75வது வினாவில் Cheetah (தமிழில் சிறுத்தை) என்ற வார்த்தைக்கு பதிலாக சீதா என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதே போல 77வது வினாவில் வரும் ஒரு ஆங்கில வார்த்தையும் தவறான அர்த்தத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.
இதே போல 49 மொழி பெயர்ப்புப் பிழைகள் கொடுக்கப்பட்டிருப்பதால், தமிழில் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கு சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு சிபிஎஸ்இ நிர்வாகம் விரைவில் பதில் தெரிவிக்க வேண்டும் என்றும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து நீட் தேர்வில் பங்கேற்ற 24 ஆயிரம் மாணவ, மாணவிகள் தமிழில் நீட் தேர்வெழுதியது குறிப்பிடத்தக்கது.