நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் டெல்லியில் 8வது மாடியிலிருந்து குதித்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் வெளியிடப்பட்டன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 40% மாணவர்கள்தான் தேர்ச்சி பெற்றனர். 


இந்நிலையில் இந்த தேர்வில் தேர்ச்சி அடைய முடியாமல் தங்களது மருத்து படிப்பு கனவு பாழான நிலையில் மாணவ, மாணவிகள் தற்கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. 


நீட் தேர்வில் தோல்வியைந்ததால் விழுப்புரம் மாணவி பிரதீபா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். பெருவளூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் பிரதீபா. இவர் பிளஸ் 2 தேர்வில் மாணவி பிரதீபா 1,125 மதிபெண்கள் எடுத்திருந்தார். 


இன்று மீண்டும் விழுப்புரம் செஞ்சி அருகே மேல்சேவூரைச் சேர்ந்த கீர்த்திகா என்ற மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தற்போது அந்த மாணவி ஆபத்தான நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில் டெல்லியை சேர்ந்த 19 வயது இளைஞரான பிரணவ் மேகந்திரதா, மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன், நீட் தேர்விற்கு தயாராகி வந்தார். கடந்தாண்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்த அவர், இந்தாண்டு மீண்டும் அந்த தேர்வை எழுதியிருந்தார். இந்த முறையும் தேர்வில் தேர்ச்சி அடைய முடியாமல் போனதால் அவர் வசித்து வந்த வீட்டின் 8வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி டெல்லி துவராகா வடக்கு பகுதியில் நடைபெற்றுள்ளது.


சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவர் பிரணவ் மேகந்திரதாவின் உடலை பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் அவர் சாகும் முன்பு எழுதி வைத்த தற்கொலை கடித்ததை கைப்பற்றியுள்ளனர். 


அதில், நீட் தேர்வில் தோல்வி அடைந்ததை குறிப்பிட்டுள்ள மாணவர் தனது தோல்விக்கு பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.