2020-ல் மருத்துவ கல்லூரிகளுக்கு புதிய திட்டம் -மத்திய அரசு!
2020-ம் ஆண்டு முதல் மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை படிப்புகள் கட்டாயமக்கபடும் என மத்திய அரசு தகவல்..!
இந்திய மருத்துவக் கவுன்சிலின் முதுநிலை மருத்துவக்கல்வி ஒழுங்கு முறைகள் 2000-ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த திருத்தங்களை ஏற்றுக் கொண்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், புதிய ஒழுங்கு முறைகளை விரைவில் அறிவிக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திட்டமிட்டுள்ள புதிய திருத்தங்களின் படி, அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளும் 2020 முதல் 2021-ம் கல்வியாண்டு முதல் முதுநிலை மருத்துவப்படிப்பை தொடங்க வேண்டும். இந்த விதிமுறைகள் அனைத்தும் புதிய கல்லூரிகளுக்கும் பொருந்தும் என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இதை நிறைவேற்ற தவறும் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக மருத்துவக் கல்லூரிகளை இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் என்றும் சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார். இந்தியாவில் டாக்டர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அதிகாரிகாரிகள், இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்தால் அடுத்த 4 ஆண்டுகளில் 10 ஆயிரம் முதுநிலை மருத்துவர்கள் உருவாகி இருப்பார்கள் என்றும் கூறியுள்ளது.